h raja blames dmk government https://x.com/HRajaBJP
தமிழ்நாடு

2026 மே 31-ம் தேதி திமுக அரசு இருக்காது : நாள் குறித்த ஹெச்.ராஜா

2026 மே 31-ம் தேதி திமுக அரசு இருக்காது. இந்த அரசு தேசிய ஜனநாயக கூட்டணியால் முழுமையாக தோற்கடிக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறினார்.

MTM

மயிலாடுதுறையில் தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது : போதைப் பொருள் அதிகமாக உபயோகிக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த கம்பரின் பெயரை மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்துக்கு வைக்க வேண்டும். இல்லையெனில், திமுக ஆட்சி தமிழ் விரோத ஆட்சி என்போம்.

கோயில் பணத்தை எடுத்து நடத்திய முத்தமிழ் கடவுள் முருகன் மாநாட்டின் இறுதியில், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது ‘இது ஆன்மிக மாநாடு அல்ல' என்று கூறினார். உதயநிதி மீது மட்டுமல்ல, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். 2026 மே 31-ம் தேதி திமுக அரசு இருக்காது. திமுகவின் அத்தனை ஊழல் அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள்.

மக்கள் விரோத திமுக அரசுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணிதான். எனவே, இந்த அரசு தேசிய ஜனநாயக கூட்டணியால் முழுமையாக தோற்கடிக்கப்படும் என்றார்.