Health Minister Arunraj alleged previous DMK govt is responsible for 600 MBBS seats in TN at risk of being lost AI generated
தமிழ்நாடு

"பறிபோன 600 MBBS இடங்கள்" : நிகர்நிலை பல்கலை. விவகாரத்தில் திமுக ஆட்சியில் விதிமீறல் : அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!

தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்களை பறிபோகும் நிலைக்கு முந்தைய திமுக அரசே காரணம் என்று, மக்கள் நல்வாழ்வுதுத்துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Kannan

பறிபோகும் 600 எம்பிபிஎஸ் இடங்கள்

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் நிலை உருவாகி உள்ளது. மாநிலத்தில் உள்ள 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெறுவதே இதற்கு காரணம்.

வாட்ஸ்ஆப் மூலம் OP முன்பதிவு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் முன்பதிவு வசதியை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதிவு ( One time Registration) மற்றும் OP முன்பதிவை ( Appointment Booking) செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப்பில் OP சீட்டு பெற ஆதார் கட்டாயம் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

திமுக ஆட்சியில் முறைகேடு

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நான் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு, விதிகள் மீறி முந்தைய திமுக அரசு என்ஓசி வழங்கியது.

திமுக அரசின் தவறால், இட ஒதுக்கீடு பாதிப்பு

தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறியதால், அவை இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது கிடையாது. முந்தைய திமுக அரசு இழைத்த தவறால், இட ஒதுக்கீடு மறுப்பு ஏற்பட்டுள்ளது.

இது சமூக நீதிக்கு எதிரானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலப் பட்டியலில் கல்வி

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என்றும் அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.

=================