தீவிரம் பெற்று வரும் பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவை சந்தித்து வருகின்றன.
சென்னையில் வெளுத்தெடுத்த மழை
அந்தவகையில், சென்னையில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியத. ஒரு பக்கம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. புறநகர் பகுதிகளுக்கும் நல்ல மழைப்பொழிவானது கிடைத்தது.
சென்னையில் மழை அளவு
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவாகி உள்ள மழைப் பதிவு விவரம்:
10 செ.மீ.க்கும் அதிகமான மழை
சென்னையில் 9 இடங்களில் 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
எம்ஜிஆர் நகர் 15 செ.மீ.
அதிகபட்சமாக எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் 15.14 செ.மீ., சைதாப்பேட்டையில் 12.96 செ.மீ., ஆலந்தூரில் 12.89 செ.மீ., டிஜிபி அலுவலகப் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மடிப்பாக்கத்தில் 11.94 செ.மீ., மதுரவாயலில் 11.58 செ.மீ., வளசரவாக்கத்தில் 11.5 செ.மீ., நெற்குன்றத்தில் 11.32 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 11.22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கொரட்டூரில் 9.88 செ.மீ., வளசரவாக்கத்தின் மற்றொரு பகுதியில் 9.64 செ.மீ., சாலிகிராமத்தில் 9.46 செ.மீ.
அம்பத்தூரில் 9.3 செ.மீ., பாரிமுனையில் 8.76 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 8.65 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மணலியில் அதிகபட்சமாக 8.62 செ.மீ., அண்ணா நகர் மேற்கில் 8.52 செ.மீ., பள்ளிக்கரணையில் அதிகபட்சமாக 8.06 செ.மீ., மணலி நியூ டவுனில் 7.9 செ.மீ., சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 7.58 செ.மீ., புழலில் 7.26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கத்திவாக்கத்தில் 6.87 செ.மீ., ஐஸ் ஹவுஸ் பகுதியில் 6.75 செ.மீ., ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 6.46 செ.மீ., முகலிவாக்கத்தில் 6.32 செ.மீ., நாராயணபுரம் ஏரி பகுதியில் 6.16 செ.மீ., கொளத்தூரில் 5.92 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கண்ணகி நகரில் 5.8 செ.மீ., பெருங்குடியில் 5.5 செ.மீ., மேடவாக்கத்தில் 5.46 செ.மீ., மேடவாக்கம் சந்திப்பில் 5.44 செ.மீ., உத்தண்டியில் 5.22 செ.மீ., அயனாவரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலாங்கரையில் 4.9 செ.மீ., ஈஞ்சம்பாக்கத்தில் 4.82 செ.மீ., சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் 4.8 செ.மீ., காசிமேட்டில் 4.6 செ.மீ., பெரம்பூரில் 4.45 செ.மீ., எண்ணூரில் 3.84 செ.மீ., தண்டையார்பேட்டையில் 3.08 செ.மீ., விம்கோ நகரில் 2.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேளச்சேரியில் 0.84 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னைக்கு இன்றும் குட் நியூஸ்
பகலில் சிறிது ஓய்வு எடுத்தும் மழை, மாலை மற்றும் இரவில் மீண்டும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னைக்கு இன்றிரவும் சிறப்பான மழையானது கிடைக்க போகிறது.
==========================