Heavy rain in many districts, maximum rainfall of 18 centimeters has recorded in Rajapalayam 
தமிழ்நாடு

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை : 24-ல் தாழ்வுப்பகுதி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Kannan

தமிழகத்தில் பலத்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. அதற்கு முன்பே மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பரலாக மழை பெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பின. இந்தநிலையில், பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் அதாவது சென்னை உட்பட பல பகுதிகளில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் என வானிலை மையம் கணித்து இருக்கிறது. கரை பகுதியை நோக்கி தாழ்வுப்பகுதி நகரும் போது, வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில்,23ம் தேதி வரை மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

ராஜபாளையத்தில் 18 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் மழை நிலவரம் ( மில்லி மீட்டரில் )

கும்மிடிப்பூண்டி - 164

தேக்கடி - 158

பொன்னேரி - 136

காயல்பட்டினம் - 120

அலக்கறை எஸ்டேட் - 113

வேம்பக்கோட்டை அணை - 93

தென்காசி - 98

============