அரசுப் பணிக்கான ஆணை
டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 401 பேருக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா சென்னையில் வழங்கப்பட்டது.
383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் தங்களது பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர்.
முதல்வர் தலைமையில் விழா
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் விழாவானது கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினார்.
மின்வாரியத்தில் 15,000 இடங்கள்
இதே விழாவில், நடப்பு ஆண்டிற்குள் மின்வாரியத்தில் காலியாக உள்ள 15,000 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணைக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற அதிரடி அறிவிப்பும் வெளியானது.
கர்ப்பிணி பெண்ணுக்கு நியமன ஆணை
இந்த விழாவில் நெகிழ்ச்சியான தருணமும் இயல்பாக அமைந்தது உதவிப் பொறியாளராக தேர்வாகியிருந்த அட்சயலட்சுமி ஒரு நிறைமாத கர்ப்பிணி ஆவார். இன்னும் சரியாக 3 நாட்களில் ( 28 ஆம் தேதி) அவருக்குப் பிரசவம் நடக்கவிருக்கும் சூழலிலும், தனது வாழ்வின் முக்கிய அங்கீகாரத்தைப் பெற அவர் விழாவிற்கு வந்திருந்தார்.
விழாவில் நெகிழ்ச்சியான தருணம்
அட்சயலட்சுமியின் நிலையைக் கண்ட முதலமைச்சர் விஜய், அவரை மேடைக்கு ஏறி வர சிரமப்படுத்த விரும்பவில்லை. சற்றும் யோசிக்காமல், உடனடியாக மேடையில் இருந்து கீழே இறங்கி, அவரிடம் வந்து பணி நியமன ஆணையை வழங்கி நெகிழ்ந்தார்
================