தமிழக தேர்தல் வாக்குப்பதிவு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 85.15% வாக்குப்பதிவு நடந்துள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
விஜயின் வேட்புமனு விவரங்கள்
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாக தெரிவித்து இருந்தார்.
விஜய்க்கு எதிராக புது வழக்கு
இந்த தகவலின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விளக்கம் தேவை எனக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெங்கடேஷ் என்பவர் கோரி இருந்தார்.
தலைமை நீதிபதி அமர்வு விசாரணை
தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி
இதை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே, இதுபோன்ற ஒரு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை சுட்டிக் காட்டினர். எனவே, இந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவித்த அவர்கள், தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
அதேபோன்று, ஜெயக்குமார், சி.வி. சண்முகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.
==============