Highest-revenue-generating railway stations nationwide: Chennai Central ranks 3rd! source: ai generated
தமிழ்நாடு

தேசிய அளவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் : சென்னை சென்ட்ரலுக்கு 3-வது இடம்!

தேசிய அளவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரூ.1,299 கோடியுடன் 3-வது இடம்; புது டெல்லி முதலிடம்.

Kavitha prasanna

தேசிய அளவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறப் பகுதிகளில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

வருவாய் அடிப்படையிலான பட்டியல்

கடந்த நிதியாண்டில் தேசிய அளவில் பயணி வருகைப் பிரிவில் அதிகமாக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல்

  1. ஆண்டுக்கு ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் புது டெல்லி ரயில் நிலையம் உள்ளது.

  2. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹௌரா நிலையம் ரூ.1,692 கோடி வருவாயுடன் இரண்டாம் இடத்தில் ஹௌரா ரயில் நிலையம் உள்ளது.

  3. ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி மூன்றாம் இடத்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்

தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நிலையம் ரூ.1,276 கோடி வருவாய் என 4-வது இடத்தையும், புது டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையம் ரூ.1,227 கோடி வருவாய் என 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து மும்பை, அகமதாபாத், புனே ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

4 வழிப் பாதைகளாக மாற்ற நடவடிக்கை

அதிக வருவாய் ஈட்டிய சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரயில் பாதைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்ற ரயில்வே துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கூடுதல் ரயில்கள் இயக்கம்

வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தப் பாதைகளில் 50 சதவீதம் கூடுதலாக ரயில்களை இயக்க வாய்ப்புள்ளதாக ரயில் பயணி ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் : சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு!

=====