historic record was set by 4.82 crore people voting in the Tamil Nadu Assembly elections google
தமிழ்நாடு

கடமையை நிறைவேற்றிய “4.82 கோடி வாக்காளர்கள்” : முதலிடத்தில் கரூர், கடைசி இடத்தில் குமரி! : சாதித்து காட்டிய தமிழகம்..

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4.82 கோடி பேர் வாக்களித்து, வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறார்கள்.

Kannan

தமிழகத்தில் வாக்குப்பதிவு

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப்போட்டியில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் வாக்குப்பதிவு சதவீதம் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.

4.82 கோடி பேர் வாக்களிப்பு

மொத்தம் 4.82 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை விட 24 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.

சாதித்து காட்டிய கரூர்

அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.78% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் நாமக்கல் 89.39%, நெல்லை 77.44%, தென்காசி 81.48%, தூத்துக்குஅடி 79.75%. ராமநாதபுரம் 76.18% என வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது தவிர வேலூர் 87.63, திருப்பத்தூர் 87.57%, விழுப்புரம் 87.67%, கள்ளக்குறிச்சி 86.89%, சேலம் 90.19%, நாமக்கல் 89.46%, ஈரோடு 89.77%, திருப்பூர் 88.22%, நீலகிரி 78.43%, கோவை 84.40%, திண்டுக்கல் 88.29%, வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

சென்னை மாவட்டத்தில் 83.03% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. திருச்சியில் 85.04%, மதுரையில் 80.20%, திருவாரூரில் 82.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி என்று எண்ணப்பட உள்ளன. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? திமுகவா இல்லை அதிமுகவா? இல்லை தவெகவே என்பது அன்றைய தினம் தெரிந்து விடும்.

=================