leadership fails to win the hearts of its cadres win the hearts of the people?” C. Vijayabaskar Edappadi. Edappadi. google
தமிழ்நாடு

“தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை வெல்லுமா?” : எடப்பாடி மீது சி.விஜயபாஸ்கர் மறைமுக விமர்சனம்...!

“உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?” என எடப்பாடியை மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

Kannan

அதிமுகவுக்கு கடும் பின்னடைவு

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு நடைபெற்று வரும் நிகழ்வுகள், அக்கட்சியினரை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணி என இருபிரிவுகளாக செயல்பட்ட அதிமுக சமாதன முயற்சிக்கு பிறகு ஒருவாறு அமைதியானது.

தவெகவிற்கு தாவிய அதிமுகவினர்

ஆனால், 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. 21 எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு திரும்பி விட்டதாக சொல்லப்பட்டாலும் சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

செயற்குழுவை உடனே கூட்டுக

“அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் செல்கிறது. கட்சி காப்பாற்றப்பட வேண்டும். கட்சியின் செயற்குழு கூட்டத்தையாவது உடனடியாகக் கூட்ட வேண்டும்” என்று சி.வி. சண்முகம் குரல் கொடுத்து வருகிறார்.

சி. விஜயபாஸ்கர் பதிவு

இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தவெகவில் இணையப் போவதாகச் செய்திகள் பரவிய நிலையில், அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்று இருக்கிறது.

அதிமுக தலைமை மீதான அதிருப்தியை மீண்டும் அவர் பதிவு செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

கட்சி தலைமை மீது விமர்சனம்

“தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?

தவெகவிற்கு செல்லும் சி. விஜயபாஸ்கர்?

உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” என விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார். இதன்மூலம்,அவர் தவெகவுக்கு செல்ல முடிவு எடுத்துவிட்டது போலவும், அதற்கு அதிமுக தலைமை தான் காரணம் என்பது போலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

===================