How can people trust the statistics for 2024 and 2025 that the DMK government is hiding?” Annamalai questioned MK Stalin google
தமிழ்நாடு

தமிழகத்தில் கொலைகள், வன்கொடுமைகள் : அரசின் புள்ளி விவரங்கள்! முதல்வர் விளக்கம் தர அண்ணாமலை வலியுறுத்தல்

Annamalai questions DMK Government : ”திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்?” என்று, அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Kannan

தமிழக அரசின் புள்ளி விவரம்

Annamalai questions DMK Government : தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், “நேற்றைய தினம், தமிழக அரசின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டது திமுக அரசு.

நம்ப முடியவில்லை

ஆனால் அந்தத் தகவல்களைச் சரிபார்த்தால், தமிழக அரசு இந்த அதிகாரிகள் மூலம் கூறிய, 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை நாம் நம்ப முடியாது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியும்.

புள்ளி விவரங்களில் வேறுபாடு

2021ம் ஆண்டில் NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் 1686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆனால் நேற்றைய தினம் உள்துறை செயலாளர் கூறும்போது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குகள் எண்ணிக்கை 1597 என்று குறைத்துக் கூறியிருந்தார்.

மக்கள் எப்படி நம்புவார்கள்?

அதாவது, ஏற்கனவே திமுக அரசு தானே சமர்ப்பித்து, தேசிய அளவில் வெளியிடப்பட்ட 2021 புள்ளிவிவரங்களில் இப்படித் தவறான எண்ணிக்கையைக் கூறும்போது, இதுவரை சமர்ப்பிக்காமல் திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்?

ஏற்கனவே வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் இவர்கள் மாற்றிக் கூறும்போது, இன்னும் வெளியிடப்படாத 2024, 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்கள் உண்மையா என்ற சந்தேகம் எழுகிறது.

முதல்வர் நேரடியாக பதிலளிக்க வேண்டும்

முக்கியமாக, உள்துறை மற்றும் காவல்துறைகளை நேரடியாகக் கையாளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் அதிகாரிகளைப் பேசவைத்து பின்னால் மறைந்து கொள்கிறார்?

இந்த முக்கியமான விஷயங்களில் பதில் சொல்ல வேண்டியது அதிகாரிகள் அல்ல, முதலமைச்சர்தான். தமிழக மக்களுக்கு நேர்மையான விளக்கத்தை வழங்குவது அவருடைய பொறுப்பு” என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

===============