How to calculate the 'cut off' score for admission to higher education? Guidelines for this  google
தமிழ்நாடு

உயர் கல்வியில் சேர 'கட் ஆப்' மதிப்பெண் : கணக்கிடுவது எப்படி? வழிக்காட்டு நெறிமுறைகள்...!

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து உயர்கல்வி படிப்புக்கு செல்ல வ்ழிகாட்டு நெறிமுறைகள் இதோ

Rohini

உயர்கல்வி படிப்பிற்கான தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கும் நிலையில்

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து உயர்கல்வி படிப்புக்கு செல்ல வேண்டும் என்று உயர்கல்வியில், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மீன்வளப் படிப்புகளுக்கு 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அந்த வகையில், எந்தெந்த படிப்புகளுக்கு எவ்வாறு கட் ஆப் மதிப்பெண்களை கணக்கிடுவது குறித்து இதில் காண்போம்

பாடவாரியாக எவ்வாறு மதிப்பெண்களை கணக்கிடுவது

1,என்ஜினீயரிங் படிப்பு...

என்ஜினீயரிங் படிப்புக்கு 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடும்போது, கணித மதிப்பெண் 100-க்கு எவ்வளவு என்பது முழுமையாகவும், இயற்பியல் ,வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்களை ,பாதியாக கணக்கிட்டு மூன்றையும் கூட்ட வேண்டும்

2.வேளாண்மை படிப்பு

வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுக்கும் போது அதற்கு ,கட் ஆப்' கணக்கிடும்போது, உயிரியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணில் பாதி அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை கூட்டி, அதில் பாதியை கணக்கிட வேண்டும்.

மேலும், அந்த மதிப்பெண்ணுடன் கணித மதிப்பெண்ணில் பாதி, இயற்பியல் மதிப்பெண்ணில் கால் பங்கு. வேதியியல் மதிப்பெண்ணில் கால் பங்கு ஆகியவற்றை சேர்த்து கூட்ட வேண்டும்.

கால்நடை மருத்துவப் படிப்பு (தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) -

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது அதில் 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடுவதற்கு ,உயிரியல் பாடத்தில் முழு மதிப்பெண்ணையும், இயற்பியல் மற்றும் வேதியியலில் எடுத்த மதிப்பெண்களில் பாதியையும் சேர்த்து கூட்ட வேண்டும்..

மீள்வளப் படிப்பு (தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் - பி.எப்.எஸ்.சி.)

மீன்வளப் படிப்புக்கு விண்ணப்பிவர்கள்,'கட் ஆப்' கணக்கிடும்போது, உயிரியல் மதிப்பெண்ணை 100-க்கும்.இயற்பியல் மற்றும் வேதியியல் மதிப்பெண்களை 50-க்கும் கணக்கிட்டு, 3 மதிப்பெண்களையும் கூட்ட வேண்டும்.

================