Tamil Nadu is set to roll out the Human Papillomavirus (HPV) vaccination programme by the end of next month. Source : HPV Vaccine
தமிழ்நாடு

HPV : புற்று நோயை தடுக்க 36 கோடி ஒதுக்கீடு : தமிழ்நாடு புதிய சாதனை

HPV Vaccine Scheme in Tamil Nadu : பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது சாதனையின் புதிய உச்சமாகும்.

Rohini

முக்கிய நோக்கம் :

HPV Vaccine Scheme in Tamil Nadu : உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் நான்காவது புற்றுநோயகும் . இதனை தடுக்க தமிழக அரசு HPV தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .

14 வயதுக்குட்பட்ட 3.3 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகளை உள்ளடக்கிய அனைத்து பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது

இந்த திட்டம் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசியை அளிப்பதன் மூலம் நோயை முன்கூட்டியே தடுப்பதை இது உறுதி செய்கிறது .

பட்ஜெட்டில் உள்ள பிற முக்கிய சுகாதார ஒதுக்கீடு

தேசிய சுகாதார இயக்கத்திற்கு (NHM) ரூ.2,754 கோடி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டத்திற்கு ரூ.1,092 கோடி, முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1,461 கோடி மற்றும்

ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு ரூ.348 கோடி ஆகியவை அடங்கும்.

இதற்காக 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.36 கோடி முதல் ரூ.38 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் முக்கிய பயன்பாடு

தனியார் மருத்துவமனைகளில் சுமார் ₹28,000 வரை செலவாகும், இந்த இரண்டு தவணை தடுப்பூசி என்ற முறையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

அறிவுறுத்தல்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறி ஆரம்பத்திலேயே தென்பட்டால் முறையான சிகிச்சையினை எடுத்துக் கொள்வதன் மூலம் சீராக மாறக்கூடிய புற்றுநோய் வடிவங்களில் ஒன்றாகும் இந்த புற்றுநோய் .

தாமதமான கட்டங்களில் கண்டறியப்படும் புற்றுநோய்களை பொருத்தமான சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்.

கூடுதல் புற்றுநோய் பராமரிப்பு முதலீடுகள்

இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மேம்பட்ட நோயறிதல் உபகரணங்களுக்காக ₹110 கோடி ஒதுக்கப்பட்டது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை நடத்த நடமாடும் மருத்துவக் குழுக்களுக்கு ₹40 கோடி ஒதுக்கப்பட்டது.

======================