Hsc-2 Answer Sheet Valuation Begins: Approximately 800,000 students across Tamil Nadu appeared for the examinations.  google
தமிழ்நாடு

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: தமிழகம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர்.

HSC +2 Answer Sheet Valuation in Tamil Nadu : கடந்த மாதம் முடிந்த தேர்விற்கு விடை தாள் திருத்தும் பணி தொடங்கியது முதல்​நாளில் முதன்​மைத் தேர்​வாளர்​களால் விடைக்​குறிப்பு சரி​பார்க்​கப்​பட்​டது.

Rohini

தேர்வு தாள் திருத்தும் பணி தொடக்கம்

HSC +2 Answer Sheet Valuation in Tamil Nadu : தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் பிளஸ்-2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி​யுடன் நிறைவு பெற்​ற நிலையில் இன்று அதற்கான தேர்வு தாள் திருத்தும் பணி தொடங்கியது.

முதன்மை தேர்வர்கள் சரிபார்ப்பு

மாணவர்களின் இந்த விடைத்தாள்கள் சரிபார்ப்பு தொடங்கிய நிலையில் ,விடைத்தாள்கள் முதன்​மைத் தேர்​வாளர்​களால் விடைக்​குறிப்பு சரி​பார்க்​கப்​பட்​டது.

முன்னரே தொடங்கிய திருத்தும் பணி

தேர்​வு​கள் முடிந்த பின்​னர் மாணவர்​களின் விடைத்​தாள்​கள் அந்தந்த மண்டல சேகரிப்பு மையங்​களுக்கு கொண்டு செல்லப்படும் . பின்னர் அங்கிருந்து விடைத்​தாள்​கள் பிரித்​து, திருத்​துதல் முகாம்​களுக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன.

இந்த தேர்தல் திருத்தும் பணிகள் முன்னர் 8 தொடங்கும் என்று தேர்வுகள் மையம் அறிவித்திருந்தது ,ஆனால் தேர்தல் காரணங்களால் முன்கூட்டியே நடத்த திட்டம் எடுக்கப்பட்டுள்ளது

தேர்தல் பணியில் : 46 ஆயிரம் முது​நிலை ஆசிரியர்​கள்

இந்த தேர்தல் திருத்தும் பணியில் , இன்று தொடங்கி ஏப்​ரல் 20--ம் தேதி வரை இதர ஆசிரியர்​கள் விடைத்​தாள்​களை திருத்தி முடிப்​பார்​கள். குறிப்பாக சுமார் 46 ஆயிரம் முது​நிலை ஆசிரியர்​கள் இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்​ளனர். இதனுடனேயே பிளஸ்-1 அரியர் தேர்வு விடைத்​தாள்​களும் திருத்​தப்பட உள்​ளன.

மே 8 தேர்வு வெளியீடு

இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து இறுதி முடிவுகள் மே 8 ல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது