Human waste found in school drinking water: conduct proper investigation ,Nainar Nagendran. google
தமிழ்நாடு

”பள்ளி குடிநீரில் மனிதக்கழிவு” : மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க, உரிய விசாரணை மேற்கொள்ளுங்க : நயினார் கண்டனம்!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கபட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Rohini

பள்ளி குடிநீர் , மனித கழிவு கலந்த விவகாரம்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவுடன் , எச்சரிக்கை துண்டுசீட்டு கண்டெடுக்கப்பட்ட விவாகரம் அனைவரிடத்திலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ,

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் கண்டனங்களையும் இந்த விவகாரம் தொடர்பாக தவெக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்

இது குறித்து அவர் அறிக்கை

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வேங்கைவயல் போன்றே மற்ருமொரு நிகழவு , வருத்தமளிக்கிறது

தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் வடு மறைவதற்கு முன்னரே, மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கவலை அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இதற்கு மிக முக்கிய காரணமாகும். எனவே இனியாவது

அமைச்சர்கள் கேமராக்களுடன் பள்ளிகளில் 'ஆய்வு நாடகம்' நடத்துவதை விடுத்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு உருப்படியான (உறுதியான) தீர்வை வழங்க வேண்டும். மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு,

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளி குடிநீர் தொட்டிகளையும் முறையாகப் பரிசோதித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் திரு. விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

என்று நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்

=====================