hung assembly looming in Tamil Nadu, expectations are high as to which parties will support Vijay google
தமிழ்நாடு

TVK ஆட்சி அமைக்க ”10 சீட் தேவை” : விஜயை ஆதரிக்க போகும் கட்சிகள் எவை? : தமிழக அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், விஜயை ஆதரிக்க போகும் கட்சிகள் எவை என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

Kannan

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை

தமிழக சட்​டப்​ பேர​வைத் தேர்​தலில், விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது.

எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்தில் தற்​போது ‘தொங்கு சட்டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

தவெகவை ஆதரிக்க போவது யார்?

ஆட்சி அமைக்க இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், தவெகவை ஆதரிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்​போது தவெக முன்பு இரண்டு வாய்ப்​பு​கள் உள்​ளன. ஒன்று, அதிமுக​வின் ஆதர​வைக் கோரு​வது.

மற்​றொன்​று, திமுக கூட்டணி கட்​சிகளின் ஆதரவை கோரு​வது.

அதிமுக ஆதரவு தருமா?

அதி​முக தலைமையிலான கூட்​டணி 53 இடங்​களை கைப்​பற்​றி​யுள்​ளது. ஒரு​வேளை அதி​முக ஆதரவு அளித்​தால் தவெக மிக எளி​தாக ஆட்சி அமைக்க முடி​யும்.

ஆனால், பிர​சா​ரத்​தின் ​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை விஜய் கடுமை​யாக விமர்​சித்துப் பேசினார். எனவே, பழனி​சாமி ஆதரவு அளிப்​பாரா என்​பது தெரிய​வில்​லை.

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்?

மற்​றொருபுறம், திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதர​வைப் பெற​வும் விஜய் திட்டமிட்டு வரு​கிறார்.

தவெக​வின் வெற்​றிக்கு வாழ்த்து தெரி​வித்​துள்ள காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்​தி, தொலைபேசி வாயிலாக விஜய்​யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு

தேர்​தலுக்கு முன்​பு, கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வந்த நிலை​யில், கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு ‘ஆட்​சி​யிலும் அதி​காரத்​தி​லும் பங்​கு’ என்று விஜய் கூறிவந்​தார்.

அந்த எதிர்​பார்ப்​புடன் விஜய்க்கு ஆதரவு அளிக்​கப்​போவது யார் என்பது விரைவில் தெரிந்து விடும்.

====