IMD Announced New Low Pressure Area has formed in Bay of Bengal Read IMD Weather Report in Tamil Nadu Google
தமிழ்நாடு

Orange Alert : புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : மீண்டும் கனமழை

IMD Weather Report in Tamil Nadu : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Kannan

வடகிழக்கு பருவமழை

IMD Weather Report in Tamil Nadu : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்ட்பர் 16ம் தேதி துவங்கியது. ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகத்தில் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அது வலுவடைந்து, ஆந்திரா நோக்கிச் சென்றது. அதன்பின் உருவான, மற்றொரு காற்றழுத்த தாழ்வு மியான்மர் நோக்கிச் சென்றது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தான், பருவமழை தீவிரமாகும் என்று வானிலை மையம் தெரிவித்த நிலையில், லேசான மழையும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையில் நகர்கிறது

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் கனமழைக்கான ஆரெஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 15ம் தேதி ( இன்று )

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

நவம்பர் 16ம் தேதி ( நாளை ) அரெஞ்சு அலர்ட்

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

* ராமநாதபுரம்

* சிவகங்கை

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* விழுப்புரம்

நவம்பர் 17ம் தேதி ( திங்கட்கிழமை ) அரெஞ்சு அலர்ட்

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

* திருவள்ளூர்

* சென்னை

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்

18ம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) மஞ்சள் அலெர்ட் - மாவட்டங்கள் :

* திருவள்ளூர்

* சென்னை

* காஞ்சிபுரம்

* ராணிப்பேட்டை

* திருப்பத்தூர்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கடலூர்

நவம்பர் 19ம் தேதி ( வியாழக்கிழமை ) மஞ்சள் அலெர்ட் - மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் நிலையில், கூடுதல் மழைப்பொழிவு மூலம், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும்.

====