IMD predicted that ow-pressure area in Bay of Bengal, intensify into Cyclone 'Akwan' by 16th  source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”16ம் தேதி உருவாகிறது அக்வான் புயல்” : தமிழகத்தை நோக்கி நகர்ந்தால், கனமழை பெய்யும், வானிலை மையம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 16ம் தேதி அக்வான் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Kannan

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கி பிறகு, வங்கக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகி, ஆந்திராவில் கரையை கடந்தன. இதனால், அங்கு கனமழையும், பலத்த சேதமும் ஏற்பட்டது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இந்தநிலையில், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய நிகோபார் தீவுகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுப்பெறும் தாழ்வுப்பகுதி

இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், ஞாயிற்றுக்கிழமை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

16ம் தேதி உருவாகும் அக்வான் புயல்

இது மேலும் வலுப்பெற்று 16ம் தேதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக உருவாகும் பட்சத்தில், அதற்கு ஈரான் பரிந்துரைத்துள்ள அக்வான் (Akvan) எனப் பெயரிடப்படும். அக்வான் என்றால் தமிழில் அசுரன் என்று பொருள்.

நடப்பு வடகிழக்குப் பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவாகும் 3-வது புயலாக 'அக்வான்' அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை தாக்குமா ’அக்வான்’ புயல்

இது தமிழகத்தை நோக்கி நகருமா, டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமா என்பது, வரும் நாட்களில் தான் தெரிய வரும்.

அக்வான் புயல் உருவாவது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

========================