IMD Weather Forecast in Tamil Nadu : 'Heat wave' to hit Tamil Nadu for 3 months. Weather New Update in Tamil Source : Google
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு 'வெப்ப அலை' வீசும். வானிலை நியூ அப்டேட்!, பொதுமக்களுக்கு அலெர்ட்

IMD Weather Forecast in Tamil Nadu : தமிழகத்தில் இனி வரும் மூன்று மாதங்களுக்கு வெப்ப அலை' வீசும் என்றும் வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Rohini

வெப்ப அலைக்கான வாய்ப்பு

IMD Weather Forecast in Tamil Nadu : தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடைகாலத்தை நெருங்கி வருகிறது .அந்த வகையில் இனி வெப்ப அலை விசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடங்கப்போகும் வெயில் காலம்

தமிழகத்தை குளிர் ஆட்கொண்டிருந்த நிலையில் நிலையில் தற்போது வெயில் வாடி வதைக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பைவிட அதிகமாகும் வெயிலின் தாக்கம்

மே மாதம் வரை 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கும் வாய்ப்பு

வெயில் அதிகரித்து இருந்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

வறண்ட வானிலையையே நிலவும்

எனினும் வரும் புதன் கிழமை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறியுள்ளது.