IMD Weather Update Today : Chance of rain on the 21st in Chennai Source : IMD
தமிழ்நாடு

வரும் 21ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு : வானிலை புதிய அப்டேட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

Rohini

சென்னை வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள குறிப்பில் வங்கக்கடல் பகுதியில் நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இது ஏற்படும் என்று தெரிவித்தது .

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்குள் உருவாகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

வரும் 21ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

வரும் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

இன்று மிதமான பனிமூட்டம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

====