Indian Army Creates First Solar Powered MAPSS Surveillance Drone here full details in Tamil DRDO
தமிழ்நாடு

இந்திய ராணுவத்தில் புதிய டிரோன் :சோலார் அம்சத்தில் அப்டேட்!

Drone : இந்திய ராணுவத்தின் உளவு மற்றும் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் சூரியசக்தி ட்ரோன் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது என்று தகவல்.

Baala Murugan

இராணுவத்தில் இயக்கப்பட இருக்கும் புதிய டிரோன்

Indian Army Creates First Solar Powered MAPSS Surveillance Drone : இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளதாக டாட்ஷாக் (Dotshak) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய டிரோன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரோன், எல்லையில் எதிரிகளின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவும். இது இந்தியாவின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இறக்கைகளில் சோலார் பேனல்கள்

இந்த ட்ரோனின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் இறக்கைகளில் அதிநவீன சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பகல் நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைத் தயாரித்து, அதன் மூலம் ட்ரோன் தொடர்ந்து நீண்ட நேரம் பறக்க உதவுகிறது.

உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகள்

பொதுவாக, சாதாரண ட்ரோன்கள் சில மணிநேரங்கள் மட்டுமே பறக்கக்கூடிய நிலையில், இந்த சோலார் ட்ரோன் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் வானில் நிலைத்து நின்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

நவீன கேமிராக்கள் பொருத்தம்

மேலும், உயர் தொழில்நுட்ப கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ட்ரோன், மலைப்பாங்கான எல்லைப் பகுதிகள் மற்றும் அடர்ந்த காடுகளில் எதிரிகளின் நடமாட்டத்தை ரகசியமாகக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எல்லைத் தாண்டிய ஊடுருவல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க முடியும். கூடுதலாக இது மிகவும் சத்தமில்லாமல் இயங்கும் என்பதாலும், எதிரிகளால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலப் பாதுகாப்புத் திட்டங்கள்

நவீன காலப் போர்களில் ட்ரோன்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து, இந்திய ராணுவம் இத்தகைய தொழில்நுட்பங்களைப் புகுத்தியுள்ளது,

எரிபொருள் தேவையில்லை

இந்தச் சூரியசக்தி ட்ரோன்கள் எரிபொருள் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பாதுகாப்பான மாற்றாகவும் அமையும்.

சோதனைக் கட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த ட்ரோன்கள், முதற்கட்டமாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,டாட்ஷாக் என்ற இந்த புதிய டிரோன் மற்றம் அதன் அப்டேட்டையும் இந்திய ராணுவ துறை அதிகாரிகள் தொடர்ந்து எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.