Diwali Special Trains 2025 : இந்தியா மற்றும் தமிழகத்தில் பொதுவாக பண்டிகைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்நாட்களில் பொது போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து வாகனங்களும் அதிகரிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தொடங்கவுள்ள தீபாவளி, சாத் பண்டிகைக்காக அக்.1 முதல் 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூடுதலாக 3 கோடி பேர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து :
இதுகுறித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தீபாவளி(Diwali 2025) மற்றும் சாத் பண்டிகை(Chhath Puja 2025) காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சுமார் 12 ஆயிரம் சிறப்பு ரயில்களை(Special Trains) ரயில்வே இயக்க உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயணம் செய்யலாம் என்றும் இது, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
மேலும், இந்த சிறப்பு ரயில்கள் அக்டோபர் 1 முதல் 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படும்(Diwali Train Ticket Booking Date) என்று தெரிவித்த அவர், இவை தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்பதிவு தேவையில்லாத முற்றிலும் பொதுப் பெட்டிகளை கொண்ட 150 ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்படும், செப்டம்பர் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 10,000 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தேவையின் அடிப்படையில் படிப்படியாக கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார். 70 ரயில்வே கோட்டங்களில் 29-ல் 90 சதவீதத்திற்கு மேல் நேரம் தவறாமை எட்டப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயார் நிலையில் உள்ளது என்றும் இதன் மற்றொரு ரயில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் வந்து விடும். அதன் பிறகே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : ஆயுத பூஜை, தீபாவளிக்கு “ சிறப்பு ரயில்கள்” : முன்பதிவு தொடக்கம்
கடந்த ஆண்டு ரயில் இயக்கம்
கூடுதலாக 1.5 கோடி பேர் பயணிக்கும் வகையில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7,724 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியது என்று கூறினார்.