international Youth Day: Overcome challenges, achieve milestones, —CM vijay google
தமிழ்நாடு

சர்வதேச இளைஞர் தினம்: சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து முன்னேறிச் செல்லுங்கள் : முதல்வர் வாழ்த்து பதிவு..!

சரவதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு , முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Rohini

சர்வதேச இளைஞர் தினம்

சரவதேச இளைஞர் தினமானது ஒவ்வோரு ஆண்டும் இதே நாளில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது , அந்த வவையில் இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக

’பல்வேறு பின்னணிகள் மற்றும் சூழ்நிலைகளில் வாழும் இளைஞர்கள், கண்ணியம், தரமான கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான பொதுவான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் ’என்பதை இது குறிக்கிறது.

இளைஞர்களின் குரல்களை வலுப்படுத்துவதற்கும், அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஆண்டு முக்கியத்துவத்தை அளிப்பதாக இந்த ஆண்டின் சர்வதேச இளைஞர் தினம் முன்மொழிகிறது

இளைஞர்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய்

சர்வதேச இளைஞர்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வ்ர் விஜய் தெரிவித்துள்ளதாவது

சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு தமிழக ,முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் , வாழ்த்து குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்! புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம்,

சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்,முதல்வர் விஜய்

முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!

உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்! கனவுகள் நனவாகட்டும்! சாதனைகள் தொடரட்டும்

என இளைஞர் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

========================