Is Annamalai Starting a New Party? BJP State President Nainar Nagendran Clarifies! source:google
தமிழ்நாடு

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், பாஜகவில் இருந்து விலகிவிட்டதாகவும் பரவும் தகவல்களுக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

Kavitha prasanna

Is Annamalai Starting a New Party? BJP State President Nainar Nagendran Clarifies!

அண்ணாமலை புதிய கட்சி?

அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், பாஜகவில் இருந்து விலகிவிட்டதாகவும் பரவும் தகவல்களுக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் விளக்கம்

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி, இன்று தனது பிறந்தநாளில் புதிய இயக்கம் அல்லது புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாக பரவி வரும் அரசியல் யூகங்களுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

பரவும் அரசியல் வதந்திகள்

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகிவிட்டதாகவும், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டுப் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

நயினார் நாகேந்திரன் நெல்லையில் பேட்டி

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அண்ணாமலைக்கு நயினார் பிறந்தநாள் வாழ்த்து

அதற்கு அவர் "என்னுடைய அருமை சகோதரர் அண்ணாமலைக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், குடும்பத்துடன் சுகத்துடனும் வாழ இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

எப்போதும் போல பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்

புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் இதுவரை என்னிடம் எதுவும் பேசவில்லை; நாங்களும் அவரிடம் அதுபற்றி விவாதிக்கவில்லை. வழக்கம்போல கட்சி ரீதியான விஷயங்களை எப்போதும்போல நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

கருத்து வேறுபாடும் இல்லை

அதேபோல், அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. நாங்கள் குடும்ப விஷயங்கள் மற்றும் இதர பொதுவான விஷயங்களைப் பேசியிருக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை" என்று கூறியுள்ளார்.

======