தாராபுரத்தில் இன்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை தவெக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டுக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தங்களுக்கு மன்னராட்சி மனப்பான்மை இல்லை என்று தனது பேச்சைத் தொடங்கினார்.
அதிமுக மற்றும் திமுக குறித்து முதல்வர் விஜய்
அண்ணாவையும் மறந்துவிட்டு கட்சியையும் மறந்துவிட்டு சுயநலமாக சுற்றுகிறவர்கள் நாம் அல்ல. எனவே மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம் என்றார்.
எம்மதமும் நம் மதம்
எம்மதமும் சம்மதம் என்பது போல எம்மதமும் நம்மதம். நாங்கள் அரசியலுக்கு வரும் போதே கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று கூறிவிட்டு தான் அரசியலுக்கே வந்திருக்கிறோம்.
அதனால் இந்த தவெக அரசு கிருஷ்ண ஜெயந்திக்கும் , கிறிஸ்துமஸ், பக்ரீத் என அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லுவோம். திமுகவைப்போல் பம்மிவிட்டு வீட்டிற்குள் எல்லாவற்றையும் செய்ய மாட்டோம் என்றார்.
திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் பற்றிய கருத்து
கொளத்தூர் மக்களுக்கு திமுக தலைவர் நன்றி சொன்னதை குறிப்பிட்டு பேசிய முதல்வர் விஜய் திமுக தலைவர் மறதியில் உண்மையை பேசுகிறார்.
அந்த குழந்தையே நான் தான் எனும் விதமாக மறந்துவிட்டு பேசுவதாகவும், ஷூட்டிங்கில் நடிக்கலாம் ஆனால் அவர் மேடையில் நடித்து, நடித்து பழகிவிட்டது போல இனி எல்லா தேர்தல்களிலும் கோடான கோடி நன்றி சொல்ல வேண்டியதுதான் என்று பேசினார்.
ஒருமையில் பேசுவதா?
கடந்த மதுராந்தகம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் விஜய் ஸ்வீட் அங்கிள் எனக் குறிப்பிட்டு பேசினார். அதற்கு திமுக தரப்பில் இருந்து பல எதிர்ப்புகளும் இருந்தது.
அதனைக் குறிப்பிட்டு பேசிய முதல்வர், நான் உறவுமுறை வைத்து பேசினால் தவறு ஆனால் அவர்கள் ஒருமையில் பேசினால் தவறு அல்ல அப்படித்தானே என்றார். மேலும் திமுக கட்சிக்காரர்களை ஏவி தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
கடவுளும் மக்களும் நம்முடன்
தொடர்ந்து பேசிய முதல்வர், எம்.ஜி.ஆர் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினார். ஜெயலலிதா அம்மையார் யாரை எதிர்த்தார்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு யாருடன் கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் சேர்ந்து ப்ளான் செய்ததாக அதிமுகவை சாடினார்.
மேலும் தவெக மீது தொடர்ந்து வைக்கப்படும் குதிரை பேர குற்றச்சாட்டை குறிப்பிட்டு பேசிய முதல்வர் மக்கள் ஆதரவு இருக்கும் போது கழுதை பேரம்..குதிரை பேரம் எதற்கு என்றார்.
சத்தியத்தின் பக்கம் தாராபுரம் மக்கள்
ஜெயலலிதா அம்மையார் சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியுள்ளார். அதனால் தான் தானும் பேசியதாகவும் குறிப்பிட்ட முதல்வர் விஜய், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல் திமுகவை தில்லாக எதிர்ப்பது இந்த விஜய் தான் என்றார்.
சத்தியத்தின் பக்கம் நிற்பவர்கள் தாராபுரம் மக்கள் . அந்த இரண்டு பேரை அதாவது திமுக, அதிமுகவை நம்பாதீர்கள் விசிலுக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.
இறுதியாக தனது நிறைவு உரையில்,
அன்று நடந்தது அம்மா ஆட்சி
அடுத்து நடந்தது அப்பா ஆட்சி
இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி
நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சி
இதுதான் உண்மையான ஆட்சி என்றார்.
======