IUML will take a seat under the leadership of Tvk, announces Kader Mohideen  google
தமிழ்நாடு

தவெக ”அமைச்சரவையில் ஐயூஎம்எல்” : அமைச்சராகிறார் ஏ.எம்.ஷாஜகான் : காதர் மொகிதீன் அறிவிப்பு !

பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை அமைச்சராக சேர்க்க இருப்பதாக ஐயூஎம்எல் தலைவர் தெரிவிப்பு

Rohini

தவெக தலைமையில் ஐயூஎம்எல் இடம் பெறும்

பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை அமைச்சராக சேர்க்க பரிந்துரைத்துள்ளோம் என்றும் அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

தவெக பெரும்பான்மை பெற ஐயூஎம்எல் ஆதரவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்ற

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்)-ன் இரண்டு சீட்களை வழங்கி எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்தது

தவெக அமைச்சரவையில் இடம்பெற கோரிக்கை

இது குறித்து பேசிய ஐயுஎம்எல் தலைவர் இரண்டு சீட்களை வழங்கி எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்தது .

அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவரை அமைச்சராக்க விரும்புவதாகவும், அந்த ஒருவரை தெரியப்படுத்துமாறும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐயூஎம்எல் தலைவர் பேட்டி

இன்றைய கூட்டத்தில் மூன்று முக்கிய செய்திகள் பரிமாறப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஐயூஎம்எல்-ன் இரண்டு உறுப்பினர்கள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தனர்.

தற்போது ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதரவு கொடுத்த நேரத்தில் எந்த நிபந்தனையையும் நாங்கள் வைக்கவில்லை; எந்தக் கோரிக்கையையும் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் முதல்வர் ஜோசப் விஜய், பெருந்தன்மையோடு ஐயூஎம்எல்-ஐ அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், உங்கள் இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார் என்று தெரிவித்துள்ளார்

எங்களை அணுகியதற்காக நன்றி

இது எங்களுக்கு எதிர்பாராத ஒரு செய்தி. நாங்கள் கேட்கவும் இல்லை, கோரிக்கையும் வைக்கவில்லை. இருந்தபோதும், எங்கள் கட்சியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெருந்தன்மையோடு எங்களை அணுகியதற்காக நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்று ஐயுஎம்எல்) தலைவர் தெரிவித்துள்ளார்

பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை நியமிக்க முடிவு

இன்றைய கூட்டத்தில், ஐயூஎம்எல்-ன் இரண்டு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் ஏன் இடம் கேட்கக் கூடாது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு, முதலில் ஒருவரை அமைச்சரவையில் சேர்ப்போம். அதன் பிறகு இரண்டாவது எம்எல்ஏவை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து கேட்போம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இருவரில் யாரை அமைச்சரவையில் இடம்பெறச் செய்வது என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் எனக்கு (காதர் மொகிதீன்) வழங்கப்பட்டது. அதன்படி, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறோம். கூட்டணி குறித்து தேர்தல் காலத்தில் முடிவு செய்வோம்” என தெரிவித்தார்.

================