IUML withdraws from the DMK alliance.  google
தமிழ்நாடு

”60 ஆண்டுகால நட்புக்கு முற்றுப்புள்ளி” : திமுக கூட்டணியில் இருந்து விலகிய IUML : காதர் மொய்தீன் விளக்கம்...!

நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்த நிலையில், விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியான IUML அறிவித்துள்ளது

Rohini

நீண்ட கால கூட்டணிக்கு முடிவு

60 ஆண்டுகாலமாக கூட்டணியியில் இருந்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ,

தவெக வில் தற்போது அங்கம் வருவதால் இனியும் திமுக கூட்டணியிலிருந்து தொடங்க இயலாது, என்றும் குடியரசுத்தலைவர் ஆட்சி அமைந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆதரவு அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்

தவெக ஆட்சி தொடர ஒத்துழைப்போம்

கூட்டணி ஆட்சி நல்லாட்சி தொடர , தவெக நல்லாட்சிக்கு ஒத்துழைக்க போவதக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் ,அதைதான் மக்களும் விரும்புகிறார்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அதைத்தான் விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்

இனி திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது : காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தமிழகத்தில் திமுகவுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய அரசியல் உறவில் பயணித்து வந்தது , மதச்சார்பற்ற கொள்கையின் அடிப்படையில்கலைஞர் கருணாநிதி காலம் தொட்டே, இரு கட்சிகளும் தேர்தல்களைச் சந்தித்து வந்தன.

60 ஆண்டுகால கூட்டணி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் (SPA) முக்கிய அங்கமாக IUML விளங்கியது.

கருணாநிதியோடு நெருங்கிய நட்பு

நெருக்கடியான பல அரசியல் சூழல்களில் திமுகவிற்குப் பக்கபலமாக நின்ற முஸ்லிம் லீக், தற்போது எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் ஆச்சிரியத்தையும் , அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் இனி தொடர்ந்து திமுக கூட்டணியில் பயனிக்க முடியாது எனவும் அதன் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற IUML

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது .

மேலும் திமுக வெற்றி பெற வேண்டும் என IUML தீவிரமாக உழைத்தாகவும் ,ஆனால் , இறைவன் செயலோ வேறாகி விட்டது என்றும் கூறிப்பிட்டு பேசினார் அக்கட்சியின் தலைவர் .

தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற IUML

சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பெற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவளித்தது

அதன்படி, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். ஷாஜஹான் தவெக அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

==============================