புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை 1639-40ம் ஆண்டுகளில கிழக்கு இந்தியக் கம்பெனியால் கட்டப்பட்டு, ஆட்சியாளர்களின் நிர்வாக அலுவலகமாக இயங்கியது. இந்தியா பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னர், மதராஸ் மாகாணத்தின் தலைமை அலுவலகமாக புனித ஜார்ஜ் கோட்டை இயங்கியது.
தலைமைச் செயலகம்
முதல் முறையாக 1921ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை புனித ஜார்ஜ் கோட்டையில் கூடியது. அப்போதில் இருந்து இப்போது வரை ஒருசில தருணங்களை தவிரத்து, சட்டமன்றம் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்பட்டு வருகிறது. அரசின் தலைமை செயலகமும் இங்குதான் செயல்பட்டு கிட்டு வருது.
ராணுவத்தின் கோட்டையில் தலைமைச் செயலகம்
ராணுவத்திற்கு சொந்தமான இந்த கோட்டையில தலைமைச் செயலகம், சட்டசபை, அரசு அலுவலகங்கள் செயற்படுவதற்கான வாடகையை தமிழ்நாடு அரசு செலுத்தி வருது. 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், தமிழக அரசோட கட்டுப்பாட்டின்கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டுக்காக இருப்பது சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டும்.
தமிழகத்தின் அதிகாரம் இங்கு எடுபடாது
மற்ற 104 ஏக்கரும், பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில இருக்கிறதால, ளாகத்தை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியாது. அதற்கான அதிகாரமும் தமிழக அரசின் கையில கிடையாது.
புதிய தலைமைச் செயலகம் - ஜெயலலிதா
எனவே, புதிதாக தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் 2001ல தொடங்கிச்சு. சட்டமன்ற தேர்தல்ல வெற்றி பெற்று முதலமைச்சரான ஜெயலலிதா, சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செஞ்சு, அதற்கான முயற்சிகள செஞ்சாங்க. ஆனால் மாணவர்கள் மற்றும் பிற எதிர்ப்புகள் காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.
பிறகு கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்யப்பட்டது. பின்னாடி ஆட்சிக்கு வந்த திமுக அந்த திட்டத்தை கைவிட்டது.
புதிய தலைமைச் செயலகம் - கருணாநிதி
புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கையில் எடுத்தாரு முதல்வரான கருணாநிதி. சென்னை ஓமந்தூரார் தோட்டத்துல புதிய தலைமைச் செயலகம், சட்டசபை பிரமாண்டமா கட்டப்பட்டு, 2010ல திறக்கப்பட்டுச்சு.
இது ஓராண்டு கூட நீடிக்கல, 2011ல மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, புனித ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாத்தினாங்க. ஓமந்தூரார் கட்டடம், பல்நோக்கு மருத்துவமனையா மாத்தப்பட்டுச்சு.
15 ஆண்டுகள் கிடப்பில்...
2021ல திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தலைமைச் செயலகம் ஓமந்தூரார் தோட்டத்திற்கே மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்திச்சு. ஆனா, அப்படி எதுவும் நடக்காம புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் இயங்கியது.
புதிய தலைமைச் செயலகம் - கையிலெடுத்த விஜய்
15 ஆண்டுகளா, புதிய தலைமைச் செயலகம் அப்படிங்க பேச்சே இல்லை அப்படின்னு சொல்லலாம். இப்போ அதை கையில் எடுத்து இருக்காரு முதலமைச்சர் விஜய். 1,200 கோடி செலவில, 20 லட்சம் சதுர அடியில் நவீன ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படும் அப்படின்னு அறிவிச்சு இருக்காரு.
அரசுத் துறைகள் ஒருங்கிணைப்பு
சுமார் 45 ஏக்கர் நிலப்பரப்பில புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட இருக்கு. சென்னையில் ஆங்காங்கே இருக்கும் பல்வேறு அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்களும் ஒரே வளாகத்துக்குள் கொண்டு வரப்படும்.
அதிநவீன மாநாட்டு அரங்குகள், பசுமை கட்டிடக் கோட்பாடுகள், தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான சேவை மையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் புதிய தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும்..
சாதிக்க போகும் முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்யோட அறிவிப்புக்கு எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கல. ஜெயலலிதா, கருணாநிதி காலத்துல இருந்த அரசியல் ரீதியான எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதால, தவெக ஆட்சியில், முதல்வர் விஜய் மூலமா தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் வரப்போறது நனவாக இருக்கு.
தலைமைச் செயலகம் - மூன்று இடங்கள் பரிசீலனை
இப்போ எழுந்திருக்கிற கேள்வி என்னன்னா, புதிய தலைமைச் செயலகம் எங்கே அமையபோகுது அப்படிங்கறது தான். இதற்காக 3 இடங்கள தவெக அரசு பரிசீலிச்சு இருக்கிறதா சொல்லப்படுது.
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி, நந்தம்பாக்கத்தில் தற்போது செயல்படாத இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகிய இந்த மூன்று இடங்கள்ல்ல ஒன்றை தமிழக அரசு தேர்வு செஞ்சு விரைவில அறிவிக்க இருக்கு.
சாதகமான, பாதகமான அம்சங்கள்
இந்த மூன்று இடங்களுக்கும் சாதகமான, பாதகமான அம்சங்கள் இருக்கு. கிண்டியை எடுக்துக்கிட்டா, லோக் பவனுக்கு எதிரே, அகலமான சர்தார் படேல் சாலை உள்ளது. எனவே, வந்து போறதுக்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. அருகில அண்ணா பல்கலைக்கழகம் இருக்கிறதால, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டி இருக்கும்.
பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை அகலமான சாலை வசதி இல்லை. நகரின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர் மற்றும் அடையாறுக்கு அருகில் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நந்தம்பாக்கம் பகுதிய பார்த்தா அகலமான சாலைகள் கிடையாது. ஆனா, எளிதில சென்றடையக்கூடிய வகையில நகரின் மையப் பகுதியில் இருக்கு. விரைவில் இங்கு மெட்ரோ ரயில் சேவையும் பயன்பாட்டுக்கு வரப்போகுது.
மரபு சின்னமாகும் ஜார்ஜ் கோட்டை கட்டடங்கள்
சரி, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, அரசு அலுவலகங்கள், சட்டசபை அங்கே போயிட்டா, 400 ஆண்டுகள் பழைமையான ஜார்ஜ் கோட்டை ராணுவத்தின் இடமா, பாரம்பரியக் கட்டிடங்கள் வரலாற்று மரபுச் சின்னங்களா பாதுகாக்கப்படும்.
ஓரிரு வாரங்களில் இடம் தேர்வு
ஓரிரு வாரங்களில, புதிய தலைமைச் செயலகம் எங்கே அமைய போகுது அப்படிங்கற அறிவிப்ப வெளியிட்டு, பணிகளை தொடங்க இருக்கு தவெக அரசு. நான்கு ஆண்டுகள்ல்ல அதாவது 2031ம் ஆண்டுக்குள் புதிய தலைமைச் செயலகம் பயன்பாட்டிற்கு வந்திரும் அப்படின்னு சொல்லப்படுது.
100 ஆண்டுகள் தேவை பூர்த்தியாகும்
அடுத்த 100 ஆண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைய இருக்கு. இதன் மூலமா, வரலாற்று சாதனை படைக்க இருக்காரு முதலமைச்சர் விஜய்.
================