Job appointment orders for medical officers; 'Nalam TN' website launched; CM Vijay inaugurates the initiative.  google
தமிழ்நாடு

மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை : “நலம் TN இணையதளம்” அறிமுகம்; முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு..!

751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்

Rohini

பணி நியமன ஆணை, புதிய கட்டிடங்கள் திறப்பு

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்

தொடர்ந்து முதல்வர் விஜய் , டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1, 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆனைகளை முதலமைச்சர் வழங்கினார்

நலம் TN இணையத்தள சேவை தொடக்கம்

மருத்துவ அமைச்சர் அருண்ராஜ் மற்றும் முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் 'நலம் TN' புதிய ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்-அப் செயலியானது அறிமுகம் செய்யப்பட்டது

இணையதளம் மூலம் நன்கொடை வழங்கலாம்

புதிதாக தொடங்கப்பட்ட இந்த நலம் TN இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் என யாரு வேண்டுமானாலும் ,நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை மருத்துவமனைகளுக்கு எளிமையாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நலம் TN சேவை

ரூ. 139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 மருத்துவக் கட்டடங்களை திறந்துவைத்து, நவீன உபகரணங்கள் பயன்பாட்டை தொடக்கிவைத்தும் ,நலம் TN சேவையையும் மக்களுக்கு அர்பணித்தார்

இது குறித்து சுகாதார துறை அமைச்சர் கூறியதாவது

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது , தமிழநாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம் , இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அதிகார நாற்காலியில் அமர்ந்து உத்தரவு பிறப்பிப்பவர் உண்மையான தலைவர் அல்ல, மக்களின் இதயங்களில் அமர்ந்து,

அவர்களின் துயர் துடைப்பவரே உண்மையான தலைவர். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்கிக் கொண்டிருப்பவர் முதல்வர் விஜய் என்று தெரிவித்துள்ளார்.

-