மக்கள் நீதி மய்யம்
தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகராக இருக்கும் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018ம் ஆண்டு தொடங்கினார்.
தேர்தல்களில் தொடர் தோல்வி
2019 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அவரது கட்சி வெற்றியை ஈட்ட முடியவில்லை. பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலிலும் அவரது கட்சி வெற்றிக்கனியை ஈட்டவில்லை. போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் தோல்விதான் பரிசாக கிடைத்தது.
திமுக கூட்டணியில் கமல்ஹாசன்
இதனால் வேறு வழியின்றி கடந்த ஆண்டு திமுக கூட்டணியில் ஐக்கியமானார் கமல்ஹாசன். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது.
ராஜ்யசபா எம்பியான கமல்ஹாசன்
திமுக எம்எல்ஏக்களின் தயவில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்று எம்பியும் ஆனார் கமல்ஹாசன்.
2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அவர் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் கமல். அவர் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது.
இந்த ஓராண்டில் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ டேட்டா மற்றும் பிஆர்எஸ் இந்தியா அமைப்பின் தகவல்கள் உறுதி செய்கின்றன.
ஓராண்டில் கமல்ஹாசன் செயல்பாடு
கமல்ஹாசன் எம்பியான பிறகு கடந்த ஆண்டு 2025ல் மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் நடந்தது.
இதில் குளிர்கால கூட்டத்தொடரில் 80 சதவீதம் வரை அவர் பங்கேற்றார். மழைக்கால கூட்டத்தொடரில் 100 சதவீதம் வரை பங்கேற்றார்.
நாடாளுமன்றம் வராத கமல்
ஆனால் 2026ம் ஆண்டில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவரது வருகை பதிவு 26 சதவீதமாக சரிந்தது. மேலும் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற்று வரும் தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரில் ஒரு நாள் கூட கமல்ஹாசன் பங்கேற்றவில்லை.
மழைக்கால கூட்டம் - வரவே இல்லை
நீட் வினாத்தாள் விவகாரம், வந்தேமாதரம் பாடல் தொடர்பான சர்ச்சைகளால் லோக்சபா, ராஜ்யசபா களேபரமாக நடந்த நிலையில் கமல்ஹாசன் ஒருநாள் கூட நாடாளுமன்றம் பக்கமே வரவில்லை.
இதனால் ஓராண்டில் கமல்ஹாசனின் ராஜ்யசபா வருகை பதிவு வெறும் 51 சதவீதமாக சரிந்துள்ளது.
ஓராண்டில் இரண்டு கேள்விகள் தான்
அதுமட்டுமின்றி இதுவரை கமல்ஹாசன் மொத்தம் 2 கேள்விகள் மட்டுமே ராஜ்யசபாவில் கேட்டுள்ளார்.
ஒன்று இந்தியாவின் தோரியம் வளம் பற்றியும், இன்னொன்ஸ் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு தொடர்பாக மட்டுமே கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒரே ஒரு விவாதத்தில் பங்கேற்பு
இதுவரை ஒரேயொரு விவாதத்தில் மட்டுமே பங்கெடுத்துள்ளார். தனிநபர் சார்ந்த எந்த மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை. இதனால் கமல்ஹாசனின் செயல்பாட்டை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
அசத்தும் திமுக எம்பிக்கள்
கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்ற அதேநாளில் ராஜ்யசபா எம்பியான திமுகவின் கனிமொழி ராசாத்தி, 257 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரது அட்டென்டென்ஸ் 97 சதவீதமாக உள்ளது. மொத்தம் 61 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
மற்றொரு திமுகவின் ராஜ்யசபா எம்பி எஸ்ஆர் சிவலிங்கம் கடந்த ஓராண்டில் மட்டும் 50 கேள்விகளை எழழுப்பி .ள்ளார். ஒரு விவாதத்தில் பங்கெடுத்துள்ள 53 சதவீத வருகையை பதிவு செய்துள்ளார்.
அதிமுக எம்பிக்களும் சிறப்பு
கமல்ஹாசனை போல் அதேநாளில் ராஜ்யசபா எம்பியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ள அதிமுகவின் இன்பதுரை மற்றும் எம் தனபால் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தனபால் 73 சதவீத வருகை பதிவுடன் 16 விவாதங்களில் பங்கேற்று 55 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இன்பதுரை 63 சதவீத வருகை பதிவுடன் 8 விவாதங்களில் பங்கேற்று 68 கேள்விகளை எழுப்பி உள்ளார். எனவே, கமல்ஹாசனின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
==========