Kamal Haasan, who has expressed his condemnation regarding the Periyar library issue, has called for the immediate removal and burning of the spurious books.
கோவை பெரியார் அறிவுலகம்
கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. 301 கோடியில் நடைபெற்ற இந்த பணிகள் நிறைவுபெற, முதல்வர் விஜய் பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார்.
ஏழு ஏக்கர் பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்ட முறையில் கட்டப்பட்டு இருக்கிறது நூலகம்.
நூல்கள் கொள்முதலில் ஊழல்
இந்தநிலையில், பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் மெகா ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பான சில ஆதாரங்களுடன் அவர் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பெரியார் பெயரில் கட்டப்பட்ட நூலகத்தில் இப்படிப்பட்ட ஊழல் என்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
யாருக்குமே தெரியாத பதிப்பகத்தில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கமல்ஹாசன் கண்டனம்
இது தொடர்பாக விசாரணை நடத்த தவெக அரசு முடிவு செய்திருக்கிறது.
பெரியார் நூலகத்தில் போலி நூல்கள் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன், தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை
போலி நூல்களால் மாபெரும் தீங்கு
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும்.
தமிழுக்கு துரோகம் இழைத்தவர்கள்
இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும்.
மோசடி பதிப்பகங்களுக்கு உடனே சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நன்றி
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
==================