பசிப்பிணி மருத்துவராய் தமிழகம்
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் உணவு முக்கிய பங்கு வகிக்குது. பசியால் வாடும் குழந்தைகளால் பள்ளிகளுக்கு வர முடியாது, கல்வி கற்றுக் கொள்ளவும் இயலாது.
உலகிற்கே வழிகாட்டிய தமிழ்நாடு
இதனால, இடை நிற்றல் அதிகமாகி, கற்ற இளையோரின் எண்ணிக்கையும் குறையுது. இதை போக்க ஏன் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே வழிகாட்டிய மாநிலம் தான் தமிழ்நாடு.
1922ல் மாணவர்களுக்கான உணவுத் திட்டம்
1922ம் ஆண்டு இதற்கான விதை சென்னையில தான் போடப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு பள்ளியில, மாணவர்களுக்கு மதிய உணவு இலவசமா வழங்கப்பட்டது.
1925ல நீதிக்கட்சி ஆட்சியில் பிட்டி. தியாகராயர் முயற்சியால் முறைப்படுத்தப்பட்டு, மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது.
விரிவாக்கம் செய்த காமராஜர்
1956ம் ஆண்டு, அப்போது தமிழக முதலமைச்சரா இருந்த பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் மதிய நேரத்தில இலவசமா உணவு கொடுக்கிற வகையில் திட்டத்தை விரிவாக்கம் செய்தாரு.
பெண் கல்விக்கு ஏற்றம்
அதன்பிறகு, 1962ல 8ம் வகுப்பு வரை இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட, லட்சக் கணக்கான மாணவர்கள் இதனால பயனடைஞ்சு, கல்வியில் சிறந்தவர்களாக தங்கள நிலை நிறுத்திக் கிட்டாங்க. குறிப்பா பெண் கல்விக்கும் இந்த திட்டம் பெரிய பலனை அளிச்சது அப்படின்னு சொல்லலாம்.
சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் விரிவாக்கம்
1982ம் வருஷம் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், மதிய உணவுத் திட்டத்தை விரிவான "சத்துணவுத் திட்டமாக" (Puratchi Thalaivar M.G.R. Nutritious Meal Programme) மாற்றியமைச்சாரு.
1984ல 10 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுச்சு.
முட்டை, பருப்பு, காய்கறிகள் மற்றும் வார நாட்களில் சமைத்த சாத வகைகள் என குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவையை ஈடுசெய்யும் வகையில் சத்துணவு திட்டம் ஒவ்வொரு ஆட்சியிலும் மேம்படுத்தப்பட்டு, இன்னிக்கு இந்தியாவில அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகிற சீர்மிகு திட்டமா தலைநிமிர்ந்து நிக்குது.
சத்துணவோடு முட்டை கொடுத்த கருணாநிதி
1989ல முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்கினாரு. 1997ல முக்கிய தலைவர்களோட பிறந்தநாள் அன்னிக்கு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்குற திட்டமும் அறிமுகமாச்சு.
2007ம் ஆண்டு15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்துச்சு.
ஜெய்லலிதா ஆட்சியிலும் திட்ட மேம்பாடு
ஜெயலலிதா முதல்வரா இருந்தப்ப, சத்துணவு திட்டம் மேலும் மேம்படுத்தப்பட, மாணவர்கள் கூடுதல் பயன் கிடைச்சுது.
காலை சிற்றுண்டி திட்டம் - ஸ்டாலின்
ஸ்டாலின் முதல்வரான பிறகு, 2022ல மதிய உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
1 முதல் 5ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுச்சு. பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட, 37 ஆயிரத்து 447 பள்ளிகளில் படிக்கும் 19 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வர்றாங்க.
8ம் வகுப்பு வரை திட்டம் விரிவாக்கம்
இந்தநிலையில்தான், முதல்வர் விஜய் தலைமையில தவெக அரசு பொறுப்பேத்த பிறகு, 5ம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கிற மாணவ, மாணவிகளுக்கு, காலை சிற்றுண்டு வழங்கப்படும்.
காமராஜர் காலை உணவுத் திட்டம்
15 ஆயிரத்து 454 பள்ளிகளில் படிக்கிற 15 லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவ, மாணவிகள் கூடுதலா பயன் பெறுவாங்க. மொத்தம் 34 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் என்பது, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கு.
முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
சென்னை திருவான்மியூரில் இருக்கிற அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் இன்னிக்கு தொடங்கி வைச்சாரு.
( பிரீத் - காலை உணவுத் திட்ட விரிவாக்கம் )
மாணவர்களோடு உணவருந்திய முதல்வர்
மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர், அவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டாரு. சிற்றுண்டி எப்படி இருக்கு, உங்களுக்கு எது பிடிக்கும் அப்படின்னும் மாணவர்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டாரு.
( பிரீத் - மாணவர்களோடு முதல்வர் விஜய் )
அரசு பள்ளி வளாகத்தையும் சுற்றுப் பார்த்த முதல்வர் விஜய், மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவிச்சாரு. இந்த நிகழ்ச்சியில, அதிகாரிகள் கலந்து கிட்டாங்க.
இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் அமலுக்கு வந்திருக்கு.
தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தது
காலை சிற்றுண்டி திட்டத்துல, கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு வகை டிபன் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற 37,447 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கிற 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கு. நடப்பு நிதி ஆண்டில இந்த திட்டத்திற்காக தமிழக அரசு கூடுதலாக ரூ.217 கோடியை ஒதுக்கி இருக்கு.
1922ல் தொடங்கி 2026 வரை
100 ஆண்டுகளுக்கு முன்னால அதாவது 1922ல மிக சாதாரணமா தொடங்கப்பட்ட, பள்ளி குழந்தைகளுக்கு இலவச உணவு என்கிற திட்டம் இன்னிக்கு, மிகப்பெரிய அளவில விரிவடைஞ்சி, கோடிக் கணக்கான மாணவர்களுக்கு கல்வியோட சத்தான சிற்றுண்டி, மதிய உணவு வளர்ச்சி அடைஞ்சு பலன் கொடுத்து வருது.
மக்கள் நலத் திட்டங்களில் முதலிடம்
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் நலத் திட்டங்கள் பொலிவு பெற்று சிறப்படைவது வழக்கமா இருக்கு. இதுல இன்னிக்கும் முதல் இடத்தில இருக்கிற திட்டம் அப்படின்னா, அது பள்ளி மாணவர்களுக்கான உணவுத் திட்டம் தான்.
================================