அணுகனிம சுரங்க திட்டம் எதிர்ப்பு ஏன் ?
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசின் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணையை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக அரசு அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்புயுள்ளன
IREL நிறுவனத்தின் செயல்பாடு
1950-இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், கடற்கரை மணல் கனிமங்கள் மற்றும் அருமண் கனிமங்களை அகழ்ந்தெடுத்தல், பிரித்தெடுத்தல் ஆகிய செயல்பாடுகளை செய்து வருகிறது
அணுக்கனிம திட்டத்தின் பின்னணி
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின் (எம்எம்டிஆர் சட்டம்) பிரிவு 17-இன் கீழ் வழங்கப்பட்ட ஒப்புதல், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அந்த வகையில் , 2026 ஜூன் 10 இதற்கான கால நிர்ணயம் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த்து
அணுக்கனிம திட்டம், ஒப்புதலுக்கு எதிர்ப்பு ஏன்
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான அனுமதியை ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அனுமதியை வழங்கியிருப்பதே ,பெரும் எதிர்ப்புக்கு காரணமாக இருக்கிறது
.ஆர்.இ.எல் நிறுவனம் சுரங்கக் குத்தகைக்கு விண்ணப்பித்தது, இதற்கான சுரங்கத் திட்டத்திற்கு அணுக்கனிம இயக்குநரகம் பிப்ரவரி 2024-இல் ஒப்புதல் அளித்திருந்தது . இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி தேவைப்படும் நிலையில் திட்டமானது நிலுவையில் இடுக்கும் நிலையில்
இந்த அனுமதிகளைப் பெறுவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஜூன் 2026-இல் நில ஒதுக்கீட்டின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு (ஜூன் 2027 வரை) நீட்டித்துள்ளது.
அணுக்கனிம திட்டம் , பின் விளைவுகள்
இந்த சுரங்கம் அமைக்கப்பட்டால் .புற்றுநோய் பாதிப்புகள் மட்டுமல்லாது, கடற்கரை பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டால், அருகில் இருக்கும் மீனவர்கள் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
அரசின் இந்த ஒப்புதலுக்கும் கம்யூனிஸ்ட கட்சிகள் , பாகம ,நாதக ஆகிய கட்சிகள் திட்டத்திற்கான ஒப்புதலை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன
சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது
அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஓராண்டு காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், மக்களைப் பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும்" அமைச்சர் சுற்றுலாத்துறை ராஜேஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
================================