ருர் விவகாரம் : நாளை அவசர விசாரணை
கரூரில் நடைபெற்ற தவெகவின் கூட்டத்தில் கூட்ட நெரிசலிலில் சிக்கி 10 க்கும் மேற்ப்பட்டோர் உயிரழந்தனர் , இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில்
தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுவெளியில் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருவதாக , அவரின் இண்டஹ் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டதை ஏற்று நாளை விசாரணைக்கு வருகிறது
நாளை விசராணை, உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திமுக அமைச்சர்களான திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் திலீப் அக்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நகு ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
நீதிபதிகள் அமர்வு கூறியிருப்பதாவது
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தற்போதைய தவெக அமைச்சர்கள் சாட்சிகளை கலைக்க முயற்சிப்பதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மனுவின் தீவிரத்தன்மை அடிப்படையில் விசாரணை
மனுவின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு இந்த வழக்கை அவசர வழக்காக இதனை விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், நாளை இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது
திமுக மனு
அவசர வழக்காக எடுக்கப்பட்டுள்ள திமுக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பல்வேறு சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவர் பேசுவது வழக்கின் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வழக்கில் இருக்கும் சாட்சிகளை கலைப்பதற்கான வழிவகையை இது உருவாக்கும். எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்த உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு,
கருணை அடிப்படையிலான அரசு வேலை, அரசாணைகள் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை வழங்க மாநில அரசுக்கு சுதந்திரம் இருந்தாலும், சிபிஐ விசாரணை காலத்தில், உச்ச நீதிமன்றம் வகுக்கும் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என் திமுக சார்பில் அளிக்கப்ப்ட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
விசாரணையை உண்மை மற்றும் நேர்மையான முறையில் அணுக வேண்டும்
இத வழக்கை விசரிக்கும் போது பாதிக்ப்பட்டவர்களின் நலனையும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் உண்மையும் , சுதந்திரமும் , நேர்மையுடனும் விசராணையை அனுக வேண்டும் என்றும்
சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தான் இந்த சம்பவத்திற்கு காரணம் எனப் பேசியதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக கோரியுள்ளது.
தவெக பொதுவெளியில் பேச அனுமதிக்க கூடாது : திமுக வலியுறுத்தல்
சிபிஐ விசாரணை முடியும் வரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக நிர்வாகிகள் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேசவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தவோ தடை விதிக்க வேண்டும் எனவும் திமுக வின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திமுகவின் அவசர விசாரணையை ஏற்ற உச்சநீதிமன்றம்
நீதிமன்றம் கோடைகால விடுமுறையில் இருப்பதா ல் ,தற்போது விடுமுறை கால அமர்வுகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது ,இந்த நிலையில் திமுகவின் கோரிக்கையை ஏற்று அவசர கால விசாரணையாக உச்சநீதிமன்றம் மேற்கொள்ள் இருப்பது குறிப்பிடத்தக்கது
================