Karur Stampede Death in TVK Campaign Rally : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்றிரவு பிரசாரம் மேற்கொண்டார். பெருங்கூட்டம் திரண்டிருந்த நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். அரசியல் கட்சிக் கூட்டம் ஒன்றில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படுவது, தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே முதன்முறை ஆகும்.
தண்ணீர், தண்ணீர் பரிதவித்த மக்கள் :
இந்தச் சம்பவம் கரூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கரூரில் பிரசாரம் செய்ய வந்தபோது, எல்லா இடத்திலும் தண்ணீர் இருந்தது. குடிநீர் பற்றாக்குறை இல்லை. ஆனால் விஜய் கூட்டத்தில் தண்ணீர் யாருமே ஏற்பாடும் செய்யவில்லை. தண்ணீர் இருந்து இருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.
போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை :
விஜய் கிளம்பி சென்ற பிறகு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சின்ன சின்ன பிள்ளைகள் கூட கூட்டதிற்கு வந்து இருந்தார்கள். அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசார் தடியடி நடத்தியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெருங்கூட்டமே நெரிசலுக்கு காரணம் :
ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. எங்கு பிரசாரம் செய்ய வேண்டுமோ அங்கு மட்டுமே விஜய், வாகனத்தின் மேலே ஏறி நிற்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணியில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்தது. விஜய் வருவதற்கு இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மொத்த கூட்டம் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு திரண்டு வந்ததே, பேரழிவுக்கு(Karur Stampede Reason) ஏற்பட் காரணம்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை :
எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ யாராக இருந்தாலும் சரி, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. தவறு செய்து விட்டார்கள். குறிப்பிட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தால் இந்த சம்பவமே நடந்து இருக்காது. அதிக கூட்டம் கூடினால் அதற்கு ஏற்ப பாதுகாப்பு தரப்பட்டு இருக்க வேண்டும்.
மிகக் குறைந்த அளவு பாதுகாப்பு :
வெறும் 30 போலீஸ் வைத்து கொண்டு 5 லட்சம் பேரை கண்ட்ரோல் செய்ய முடியுமா? இபிஎஸ் எல்லா இடத்திற்கும் செல்கிறார். அவர் போகும் இடத்தில் ஏதாவது சம்பவம் நடக்கிறதா? மக்கள் கூட்டம் கூடுகின்ற இடத்தில் அரசுதான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனவே இந்த துயரத்திற்கு முழுமையாக அசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் படிக்க : Karur Death : உயிரிழப்பிற்கு விஜய் செய்தது என்ன? முழு விவரம் இதோ!
மக்களுக்கே பாதுகாப்பில்லை:
அரசியல்வாதிகள் செய்யும் அரசியலுக்கு மக்கள் பலிகடா ஆக வேண்டுமா? சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம். இவர்கள் வந்தால் மட்டும் நிறைய போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகிறார்கள். மக்களுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை. முதலில் சிறிய இடத்தில் பிரசாரம் செய்ய எப்படி அனுமதி கொடுத்தார்கள். இது தவறான விஷயம். கரூர் மக்களை கேவலப்படுத்தி விட்டார்கள். இவ்வாறு பொதுமக்கள் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்தனர்.
==============