Premalatha Vijayakanth on Karur Stampede Death : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்றிரவு பிரசாரம் செய்தார். கட்டுங்கடங்காமல் திரண்டிருந்த கூட்டம், ஒரு கட்டத்தில் அவரை பார்க்க முண்டியடித்து செல்ல, நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், போலீசார் தடியடி நடத்தியதும் நெருக்கடி ஏற்பட முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
குறுகலான இடத்தில் பிரசாரம் :
இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ” விஜய் பிரசாரம்(Vijay Karur Campaign) செய்த இடம் நெரிசல் மிகுந்த குறுகிய பாதை என்று பொதுமக்கள் தெரிவித்ததாக கூறினார்.
தடியடி நடத்தியது எதற்காக? :
இப்படிப்பட்ட இடத்தில் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கியது ஏன்? ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் விஜய் கூட்டம் நடத்திய போது, அவர்க்கு எவ்வளவு கூட்டம் வந்தது என்பது அரசுக்கு தெரியாதா? கூட்டத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க : Karur Death : உயிரிழப்பிற்கு விஜய் செய்தது என்ன? முழு விவரம் இதோ!
மைதானத்தில் மட்டுமே பிரசாரம் :
விஜய் போன்றவர்கள் பிரசாரம் செய்யும் போது, பெரிய மைதானம் போன்ற இடத்தில்தான் அனுமதி தர வேண்டும். போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். உண்மை இப்படி இருக்க இது யாருடைய தவறு? பொறுப்பானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். எனவே, 40 பேர் பலியானதற்கு உரிய பதிலை தமிழக அரசு கூற வேண்டும்” இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த்(Premaltha on Vijay Campaign Death) கேட்டுக் கொண்டார்.
==============