Karur stampede incident: Tamil Nadu government appeals against appointment order google
தமிழ்நாடு

கரூரில் 31 பேரின் பணி நியமனம் ரத்து : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

கரூர் கூட்ட நெரிசலில்சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது

Rohini

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் , பணி நியமன ஆணை ரத்து

கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-ஆவது பிரிவுகளுக்கு நேரடியாக முரணானவை என்றும்,

இந்தச் சம்பவத்திற்காக கருணை அடிப்படையிலான நியமனங்கள் வழங்கப்பட்டால், இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இதேபோன்ற வேலைவாய்ப்பை கோரி முன்வர வழிவகுக்கும் என்று நீதிபதிகள் கூறி அராசணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்

ரத்து ஆணை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்தது பணி ஆணை வழங்கியுள்ள நிலையில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நியமனம் ரத்து நீதிபதிகள் கூறிய தீர்ப்பு என்ன

பணி நியமன ஆணை ,ஒரு தவறான முன்​னு​தா​ரணத்​தை​யும் ஏற்​படுத்​தும். போட்​டித் தேர்​வு, தகுதி அடிப்​படை​யில் மட்​டுமே அரசுப் பணி வழங்க வேண்​டும்.எனவும் நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்​வில் இந்த மனுக்​கள் மீது விசாரணை நடைபெற்ற நிலையில் ,அரசுப் பணிக்​கான போட்​டித் தேர்​வுக்​காக லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் இரவு, பகலாக தயா​ராகி வரு​கின்​றனர்.

அப்​படி இருக்க, நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கு​வது சட்ட விரோதம்.கருணை அடிப்​படையில் பணி எப்​படி வழங்க வேண்​டும் என்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் பல வழி​காட்​டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. அதை பின்​பற்​றாமல் அரசுப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது.

பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு வழங்​கிய பிறகும், அரசுப் பணி வழங்க வேண்​டிய அவசி​யம் என்ன?.ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச்​சூடு, மதுரை கவுன்​சிலர் லீலா​வதி கொலை சம்​பவங்​களில் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கிய​தாக அரசுத் தரப்பு கூறுகிறது. அந்த சம்​பவங்​களு​டன் கரூர் சம்​பவத்தை ஒப்​பிட முடி​யாது என்று தெரிவித்து பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்

துயரச் சம்பவத்தின் பிண்ணனி என்ன

2025 செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.இந்த கருர் சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது

அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.பின்னர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூரி இழப்ப்பீடு தொகையுன் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற் பிறகு கரூர் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டடு அதன்படி , ஜூலை மாதம் 10-ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

================================