கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கேஆர்எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இரு அணைகளும் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இருகரைகளை தொட்டவாறு, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தமிழகத்தின் ஒகேனக்கல் பகுதியில் வினாடிக்கு 32,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே, ஒகேனக்கல் காவிரியில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் 112 அடியாக உள்ளது.
டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
=====