Lord Krishna Janmashtami Celebrated As Krishna Jayanthi 2025 
தமிழ்நாடு

"அன்புத் திருவிழா" : குழந்தைகளும் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி 2025

Krishna Jayanthi 2025 Celebration : கிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி. குழந்தைகளை அலங்கரித்து கொண்டாடப்படும் திருவிழா இது.

Kannan

குழந்தைகளுக்கான கிருஷ்ண ஜெயந்தி :

Krishna Jayanthi 2025 Celebration Date : இறைவன் வெவ்வேறு அவதாரங்கள் மூலம் பூமியில் அவதரித்த நாளை விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். இதில், குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து கொண்டாடும் பண்டிகை என்றால் அது கிருஷ்ண ஜெயந்தி மட்டுமே.

மக்கள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி :

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(Mahavishnu) ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) ஆகும். இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். வீடு முழுவதும் அலங்கரித்து, விதவிதமான பலகாரங்கள் செய்து, ஆடிப் பாடி, கால்களை கோலங்களாக போட்டு, பக்தி மற்றும் மகிழ்ச்சி பெருக்குடன் கொண்டாடப்படும் விழாதான் கிருஷ்ண ஜெயந்தி.

கிருஷ்ணர் அவதாரக் கதை :

மதுரா நகரை, கம்சன்(Krishna Janmashtami Story) என்ற மன்னன் கொடுங்கோல் ஆட்சி செய்தான். மக்களை அச்சுறுத்தியும், அநீதியான செயல்களை செய்தும் வந்தான். தன்னுடைய சகோதரியான தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்து வைத்தான். ஒருநாள், இருவரையும் தேரில் அழைத்துச் செல்லும் வேளையில், “கம்சா! உன் சகோதரியின் எட்டாவது குழந்தையே உன் மரணத்திற்கு காரணமாக இருக்கும்” என அசீரரி குரல் ஒலித்தது.

சிசுக்களை கொன்ற கம்சன் :

அச்சமடைந்த கம்சன்(Kamsan), முதலில் தங்கையை கொல்ல முயன்று, பின்னர் மனம் மாறி இருவரையும் சிறையில் அடைத்தான். சிறையில் பிறந்த 7 சிசுக்களையும் கம்சன் கொன்றான். எட்டாவது குழந்தையாக அவதரித்த கிருஷ்ணர்(Krishna Janmashtami), அதே நாளில் பிருந்தாவனத்தில் பிறந்த நந்தகோபனின் மகளோடு மாற்றி வைக்கப்பட்டார்.

கம்சனை கொன்ற கிருஷ்ணன் :

கம்சன் அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றபோது, அக்குழந்தை தெய்வீக வடிவம் எடுத்து, “உன் இறப்புக்கு காரணமான குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது” என்று கூறி மறைந்தாள்.

கிருஷ்ணர் சிறுவயது சாகசங்கள் முலமாக தன்னை கொல்ல அனுப்பப்பட்ட அனைவரையும் கொன்றார். பின்னர் தன் மாமனான கம்சனை வீழ்த்தி, சிறையில் இருந்த தந்தை-தாயை விடுவித்தார்.

இவை அனைத்துமே கிருஷ்ணரின் குழந்தை பருவத்தில் நிகழ்ந்தவை என்பதால், கிருஷ்ண ஜெயந்தியை(Krishna Jayanthi) தங்கள் வீட்டுப் பிள்ளையின் பிறந்த நாளைப் போல கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் :

கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi 2025 Celebration Date) அன்று, வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை, சிறு குழந்தையின் பாதசுவடுகள் வரையப்படும். கிருஷ்ணர் வருவார் என்ற நம்பிக்கையில். சிறுவர்களுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அலங்கரித்து அழகு பார்த்து விழா களை கட்டும்.

மேலும் படிக்க : Avani Avittam : ஆவணி அவிட்டம் : ஆன்மிக முக்கியத்துவமும் புனிதமும்

காலை எழுந்து குளித்து, வீடு சுத்தம் செய்து, அரிசி மாவில் கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி, இனிப்புகள், பலகாரங்கள் செய்து கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்வார்கள்.

வீடுகளில் கொண்டாடப்படுவது போல, வைணவக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விதவிதமான பலகாரங்கள் கிருஷ்ணருக்கு(Krishna) படைக்கப்பட்டு, பக்தர்கள் விநியோகிக்கப்படும்.

=====