தசரா விழா கொண்டாட்டம் :
Kulasekarapattinam Dasara Festival 2025 Date : இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான் தசரா திருவிழா கோலாகலமாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது.
முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம் :
அதன்படி, இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா(Dasara Festival), கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. காலை 6 மணி அளவில் கொடியேற்றம்(Kulasai Dasara 2025 Flog Hosting) நடைபெற்றது. கொடிமரத்துக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது.
காப்புக் கட்டிய பக்தர்கள் :
மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் கோயில் பூசாரியிடம் திருக்காப்பு கட்டினர். தாங்கள் நேர்த்தி கடன் பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலிக்க தொடங்கினர். இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தினமும் சிறப்பு அபிஷேகம் :
நாளைமுதல் அக்டோபர் 1ம் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, 9 மணி, 10.30 மணி(Kulasai Dasara 2024 Date And Time), பகல் 12 மணி, 1.30 மணி, மாலை 4.30 மணி, 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.
தினமும் அம்மன் திருவீதியுலா :
இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தினமும் இரவு 10 மணிக்கு பல்வேறு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா(Kulasai Mutharamman Devi Temple) வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 6ம் நாள் திருவிழா முதல் 10ம் நாள் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடங்கள் அணிந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
மேலும் படிக்க : நவராத்திரி 2025 சக்தி வழிபாடு : பெண்மை போற்றி, நன்மை பெறும் விழா
10ம் நாள் சூரசம்ஹாரம் :
10ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2ம் தேதி இரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரனை(Mahishasuran) சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறும். கொடியேற்றத்தை முன்னிட்டு, குலசேகரபட்டினத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
==============