ADMK Chief Edappadi Palanisamy on TN Farmers Loan Without CIBIL Score 
தமிழ்நாடு

EPS: ‘சிபில் ஸ்கோர்’ இன்றி பயிர்க்கடன் : சாதித்து காட்டிய எடப்பாடி

Edappadi Palanisamy on Farmers CIBIL Score : விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்ற எடப்பாடியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Kannan

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் :

Edappadi Palanisamy on Farmers CIBIL Score : விவசாய கடன் வழங்குவதில் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. சிபில் ஸ்கோர் (CIBIL score) அடிப்படையில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த புதிய திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிபில் ஸ்கோர் - அதிமுக எதிர்ப்பு :

விவசாயிகள் பயிர்க்கடன் பெறும்போது சிபில் ஸ்கோர் கேட்கப்படுவது குற்றம் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், தமிழகம் வந்த பிரதமர் மோடியை திருச்சியில் சந்தித்த எடப்பாடி, சிபில் ஸ்கோர் விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

இதை பரிசீலித்த மத்திய அரசு உடனடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. அதன்படி, கூட்டுறவு வங்கிகள் சிபில் ஸ்கோர் பார்க்காமல் பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்டா விவசாயிகளுக்கு பயன் :

இதுகுறித்து பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடியிடம் நேரில் மனு அளித்தேன். அதன் விளைவாக, தற்போது கூட்டுறவு வங்கிகள் சிபில் ஸ்கோர் பார்க்காமல் பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாணை, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அமையும். கடன் பெறும் செயல்முறை எளிமையாகி, பசுமை நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு நேர்மையான நிவாரணம் கிடைக்கும்” என்று அவர் கூறினார்.

திமுக ஆட்சிக்கு கண்டனம் :

நாம் ஆட்சி செய்த போது உரிய நேரத்தில் விவசாய கடன், மும்முனை மின்சாரம், கடன் தள்ளுபடி போன்ற பல நன்மைகள் வழங்கப்பட்டன. ஆனால் இப்போதைய திமுக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என எடப்பாடி குற்றம்சாட்டினார்.

கூட்டணி - அதிமுக நிலைjபாடு :

“கூட்டணியில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. தமிழக மக்கள் நலனுக்காக தி.மு.க. ஆட்சியை மாற்றும் நோக்கத்தில் அதிமுக வலிமையாக செயல்படும், 2026 சட்டமன்ற தேர்தலை மையமாகக் கொண்டு திட்டமிடப்படும் கூட்டணிக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான அறிவிப்பு 2026 ஜனவரியில் வெளிவரும்” என்றும் பழனிசாமி கூறினார்.

====