அதிமுகவின் இருந்து திமுகவில் இணைந்த தலைவர்கள்
எ.வ.வேலு
எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தில் தன்னை இணைத்து கொண்ட இவர் 1972ல் அ.தி.மு.க., வில் சேர்ந்தார். 1984ல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., அரசியல் வாழ்வை தொடங்கி 1995ல் தி.மு.க., வில் இணைந்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ., ஆன இவர் 2006-2011, 2021-2026 என இருமுறை அமைச்சர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர்.
சாத்துார் ராமச்சந்திரன்
எம்.ஜி.ஆர்., ஆட்சியில் 1980-1988 பொதுப்பணி, கூட்டுறவு என இருமுறை அமைச்சர் பதவியில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட இவர் 2001ல் தி.மு.க., வில் இணைந்தார்.
1, 2021 - 2026 இருமுறை அமைச்சர். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலர எனபது குறிப்பிடத்தக்கது.
அனிதா ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க., சார்பில் 2001, 2006ல் எம்.எல்.ஏ., 2002 -2006ல் அமைச்சர். 2009ல் தி.மு.க., வில் சேர்ந்து 4 முறை எம்.எல்.ஏ., ஆனா இவர் 2021-2026ல் அமைச்சராக இருந்து வருகிறார் . மேலும் இவர் துாத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர என்பது குறிப்பிடத்தக்க்கது.
சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணிபுரிந்து வரும் இவர் 2001, 2006ல் அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., 2011ல் தி.மு.க.,வில் சேர்ந்தார். தராது திமுகவில் . சென்னை கிழக்கு மாவட்ட செயலராக இருந்து வருகிறார்.
அதிமுகவில் இருந்து திமுகவில் தண்ணிய இணைத்து கொண்ட பிற தலைவர்கள்
அந்த வகையில் அமைச்சர்களான செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன்
ரகுபதி ,ராஜகண்ணப்பன்,தோப்பு வெங்கடாசலம்
பழனியப்பன்,செல்வகணபதி,லட்சுமணன் என பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டுள்ளனர் .
தற்போது திமுகவில் தன்னை இணைத்து கொண்ட ஓ பி எஸ்
1973ல் அ.தி.மு.க.,வில் இணைந்த ஓ பன்னீர் செல்வம் . எம்.எம்.ஏ., மாவட்ட செயலர், அமைச்சராக பதவி வகித்துள்ளார். கட்சியின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் தன்னை அறிமுகபடுத்தி கொண்டுள்ளார் . எதிர்க்கட்சி துணை தலைவர், மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். 2026 பிப். 27ல் தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார் .
இதுதவிர அ.தி,மு,க,, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன் (உசிலம்பட்டி), வி.பி.கலைராஜன் ,கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை), சின்னசாமி , சுப்புரத்தினம் (பழநி), பால கங்காதரன் (சிவகாசி), அ.தி.மு.க., கட்சியின் நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து தி.மு.க.வில் தங்களை இணைந்து கொண்டுள்ளனர் .