Tamil Nadu Election Polling 2026 Percentage : கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை விட 2026 தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவு அதிகரித்துள்ளது.
* முதல்வர் ஸ்டாலின் - கொளத்தூர் தொகுதி - 2021ல் 61.79% வாக்குகள் இந்த முறை 86.11%
* எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி - 2021ல் 87.14% வாக்குகள், இந்த முறை 92.08% வாக்குகள் பதிவு
* உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி - 2021ல் 58.74%, இந்த முறை 84.34% வாக்குகள் பதிவு
* விஜய், தவெக தலைவர் - பெரம்பூர் தொகுதியில் 89.79% வாக்குகள், திருச்சி கிழக்கு தொகுதியில் 81.77% வாக்குகள் பதிவு
* சீமான், நாம் தமிழர் - காரைக்குடி - 74.22% வாக்குகள் பதிவு
* மத்திய அமைச்சர் எல். முருகன் - அவினாசி - 90.57 சதவீத வாக்குகள்
* சௌமியா அன்புமணி - தர்மபுரி - 89.44% வாக்குகள்
* நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி - 85.74% வாக்குகள்
* தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர் - 74.81% வாக்குகள்
* பிரேமலதா விஜயகாந்த் - விருத்தாசலம் - 86.20% வாக்குகள்
* ஓ. பன்னீர் செல்வம் - போடி - 82.84% வாக்குகள்
மாவட்ட வாரியான ஒட்டுமொத்த நிலவரம்
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73,43,291 ஆக உள்ள நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரியாக 85.10% எனப் பதிவாகியுள்ளது.
நட்சத்திரத் தொகுதிகளில் பதிவாகியுள்ள அதீத வாக்குப்பதிவு, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமையுமா என்பதைத் தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.
=========