Live broadcast of Assembly proceedings, which was cut off, will resume: Minister Rajmohan announces.  google
தமிழ்நாடு

”இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடரும்” : அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு...!

இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

Rohini

ஆளுநர் உரைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்

தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, இந்த வாழ்வு தமிழ் தந்தது.என்ற பேச்சை தொடங்கிய அமைச்சர் , இன்று தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடமானது அளிக்கப்பட்டிருக்கிறது என்ரும் , வந்தே மாதரத்திற்கு கடைசி இடமாந்து அளிக்கப்பட்டிருக்கிறது , இது ஒரு நல்ல தொடக்கம் என்று தெரிவித்தார்

எதிர்கட்சியின் எதிர்ப்பு குறித்து அமைச்சர் கூறியதாவது

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு மதிப்பு இருக்கின்றது , எதிர்கட்சிகள் என்ற சார்பில் எதிர்வினையை தாரலமாக எதிர்கட்சிகள் ஆற்றலாம் .இன்றைய தினத்தில் கூட திமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சிகள் அவர்களின் எதிர்ப்பை காட்டலாம். ஆனால், அவர்கள் சென்ற ஆட்சியில் அப்படி வந்திருக்க வேண்டும். கொஞ்சம் கால தாமதமாக வந்துள்ளனர்.

தவெகவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்

இன்றைய ஆளுநர் உரை நல்ல முறையில் தொடங்கி இருக்கிறது , இது ஒரு நல்ல தொடக்கம் நல்ல முழக்கமாக இருக்கிறது. இன்றும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறதாகவும். அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

2024ல் சராசரியாக ஒரு நாளைக்கு 30 வழக்குகள் பதியப்பட்டதாக சொல்கிறார்கள். இப்போது அதைவிட குற்றங்கள் குறைந்துள்ளன. காவல் நிலையங்கள் மீதான பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வெளியில் வருகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்

இப்போது எங்கள் ஆட்சியில் குற்றங்களுக்கு உடனடியான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் , சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும், சமூக நீதி கணக்கெடிப்பையும் மாநில அரசு நடத்த இருகிறது என்றும் இன்றை உரை குறித்து பேசினார்

சட்டப்பேரபை கூட்டத்தொடர் இனி நேரலை செய்யப்படும்

கட்ந்த வருடங்களாக இருட்டடி செய்யப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலையாக ஒளிப்பரப்படும் என்று பள்ளிகல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார் .

====================