திருப்பரங்குன்றம் தீபத்தூண்
Thiruparankundram local people participate in hunger strike for Deepathoon (stone) pillar issue : முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றக் கிளை கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது. இதை தமிழக அரசும், கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
நீதிமன்றம் நிபந்தனை
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, '' 13ம் தேதி ( இன்று ) காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டார். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும்'' என நீதிபதி நிபந்தனை விதித்து இருந்தார்.
உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம்
அதன்படி உள்ளூர் மக்கள் திருப்பரங்குன்றத்தில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை
திருப்பரங்குன்றம் மலை குறித்து திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் பாடல்கள் உள்ளன. எனவே, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிறது.
1926-ம் ஆண்டு இங்கு சிவில் பிரச்சினை எழும் வரை அந்த மலையின் மீது உள்ள தீபத்தூண் பகுதியிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது, குறிப்பிடத்தக்கது.
=====