https://x.com/mkstalin
தமிழ்நாடு

அஜித் தாயாரிடம் முதல்வர் வருத்தம் : நியாயப்படுத்த முடியாத தவறு!

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமைக்காக அவரது குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

MTM

காவல் மரணம் அடைந்த திருபுவனம் இளைஞர் அஜித் குமார் வீட்டிற்கு அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்து தருவதாக அப்போது அவர் உறுதியளித்தார்.

மேலும் அமைச்சரின் செல்பேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஜித் குடும்பத்தினரிடம் பேசினார். அவருடைய தாயார் மற்றும் சகோதரரிடம் வருத்தம் தெரிவித்த முதல்வர், யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்றும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் செய்து தரப்படும் என்றார்.

ஆறுதல் கூறியது பற்றி தெரிவித்த அஜித் தாயார் , வருத்தமாக இருக்கிறது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள் என்று தன்னிடம் முதல்வர் கூறியதாக தெரிவித்தார். இந்த குற்றத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தான் முதல்வரிடம் கோரிக்கை வைத்தாக அவர் மேலும் கூறினார்.