புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
Low Pressure form in Andaman Sea Weather Update in Tamil : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுவடையும். தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும்.
11 மாவட்டங்களில் மழை
இன்று (நவம்பர் 22) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 16 மாவட்டங்களில் மழை
காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நாளை (நவம்பர் 23) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 24ல் மழை மேலும் வலுப்பெறும்
நவம்பர் 24ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நவம்பர் 25ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என வானிலை மையம் கூறியுள்ளது.
====