வலுவிழந்த டிட்வா புயல்
Heavy rainfall lashed the three Tamil Nadu districts following the landfall of Cyclone Dithwa : வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கைக்கு அதிக மழைப்பொழிவை கொடுத்து, தமிழகம் நோக்கி வந்த. ராமநாதபுரம், நாகை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் புயலால் மழை கொட்டித் தீர்த்தது. கடலில் தொடர்ந்து பயணித்த போது, வலுவிழந்த டிட்வா, காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இது தொடர்ந்து ஆந்திரா நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சென்னை அருகே தாழ்வு மண்டலம்
ஆனால், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி விட்டு, சென்னைக்கு அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று முதல் நிலைகொண்டி இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை அருகே கரையை கடக்கும்
நேற்றிரவு சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை தொடரும்
இதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடரும். சென்னை மற்றும் திருவள்ளூரில் ஒருசில இடங்களில் கனமழை தொடரும்
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
பாரிமுனையில் 26 செ.மீ. மழை
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
===================
.