பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர், லயோலா மணி நியமனம்
லியோனி வகித்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பதவிக்கு லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார் ,இந்த புதிய பதவிக்கான நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்
பள்ளி கல்வி துறையின் உத்தரவு
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக
லயோலா மணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது பள்ளி கல்வி துறை. இதற்கான பணி நியமன ஆணையை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் முதல்வர் வழங்கினார்
யார் இந்த லயோலா மணி
கல்வி, சமூக மற்றும் பொதுவாழ்வுத் துறைகளில் லயோலா மணி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி அதில் பயணித்தவர் , குறிப்பாக அரசியல் மற்றும் கல்வி சார்ந்த விவாதங்களிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போதுஅவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பு, கல்வித்துறையில் அரசின் முக்கிய நியமனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த பாடநூல் கழகத்தின் பங்கு என்ன
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சடித்து வழங்குதல், அரிய தமிழ் நூல்களை மறுபதிப்பு செய்தல் மற்றும் கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாடநூல்களையும், தனியார் பள்ளிகளுக்கு உரிய விலையிலும் அச்சிட்டு வழங்கி வருகிறது
அரசியலில் கவனம் பெற்றிருக்கும் பதவி
லயோலா மணியின் நியமனம் தற்போது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது .சமூக வளைத்தளங்களிலும் பேசுப்பொருளாகி வருகிறது , குறிப்பாக தன்னுடைய பதிவிக்கு சிறப்பான செயல்பாடுகளை வழங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்பு நிலவி வந்த சூழலில் , தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பதவி நியமன ஆணையானது வழங்கப்பட்டுள்ளது.
=====================