Gas cylinder shortage in india:
சமையல் எரிவாயு தட்டுப்பாடு
Edappadi Palanisamy about LPG Gas Cylinder Stopped : மேற்காசிய நாடுகளில் நிலவு போர் சூழல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
உணவகங்கள் மூடப்படும் நிலை
இதன் விளைவாக உணவகங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு மாநில அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருள்
இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்கள் பாதிப்பு
தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
பொறுப்புள்ள மாநில அரசாக செயல்படுங்கள்
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும்,
அம்மா உணவகங்களை முழுவீச்சில் இயக்க வேண்டும்
ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.