Madras HC sensational verdict, Inbadurai's victory in Radhapuram in 2016 elections invalid google
தமிழ்நாடு

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி : ”இன்பதுரை வெற்றி செல்லாது, அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிப்பு” : உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

2016ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Kannan

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி

2016ம் ஆண்டு சட்​டப் ​பேர​வைத் தேர்​தலில் நெல்லை மாவட்​டம் ராதாபுரம் தொகு​தி​யில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டனர்.

இன்பதுரை vs அப்பாவு

வாக்கு எண்ணிக்கையில், இந்த தேர்​தலில் வெறும் 49 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் இன்​பதுரை வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது. இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​வி்க்​கக்​ கோரி அப்​பாவு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அதே ஆண்டு தேர்​தல் வழக்கு தொடர்ந்​தார்.

நீதிமன்றத்தில் அப்பாவு கோரிக்கை

தபால் வாக்கு எண்​ணுவதில் முறைகேடு நடைபெற்றதாக அப்பாவு குற்றம்சாட்டி இருந்தார். எனவே, இன்​பதுரை 49 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும், தான் வெற்றி பெற்றதாக வெளியிட வேண்டும் என்று அப்பாவு கோரியிருந்தார். .

உச்ச நீதிமன்றம் தடை

வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம் 2019ம் ஆண்டு அக்டோர் 1ம் தேதி மறு​வாக்கு எண்​ணிக்கை நடத்த உத்​தர​விட்​டது. அக்டோபர் 4ம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், முடிவு​களை அறிவிக்​க கூடாது என உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​தது.

கடந்த மாதம் இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே 2021 மற்​றும் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​கள் முடிந்து விட்​ட​தால் 2016ல் தொடரப்​பட்ட தேர்​தல் வழக்கை நிலு​வை​யில் வைத்​திருப்​பது தேவையற்​றது எனக்​கூறி முடித்து வைத்​தது.

அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிப்பு

இந்​நிலை​யில் இந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் பிறப்​பித்​த தீர்ப்​பில், ”தபால் வாக்​கு​களுக்கு பள்​ளித் தலைமை ஆசிரியர்​கள் சான்​றொப்​பம் அளிக்க முடி​யும் என்​ப​தால் மறு வாக்கு எண்​ணிக்கை அடிப்​படை​யில் தபால் வாக்​கு​களில் அப்​பாவு 153 வாக்​கு​களை பெற்​றுள்​ளார்.

இன்பதுரை வெற்றி செல்லாது

அதன்​மூலம் 104 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அப்​பாவு வெற்றி பெற்​றுள்​ளார்.எனவே அதி​முக வேட்​பாளர் இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது.

தற்​போதைய சூழலில் இன்​பதுரையை தகுதி நீக்​கம் செய்ய முடி​யாது என்​றாலும், 2016- 2021 கால​கட்​டத்​தில் சட்​டப்​பேரவை பதிவேடு​கள் உள்​ளிட்ட அரசு ஆவணங்​களில் ராதாபுரம் தொகு​தி​எம்​எல்ஏ என்ற இடத்​தில் இன்​பதுரை பெயரை நீக்​கி​விட்​டு, அப்​பாவு பெயரை இடம்​பெறச் செய்ய சட்​டப்​பேர​வைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இன்பதுரை சலுகை பெறத்தடை

தவறான முறை​யில் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்ட இன்​பதுரை இந்த கால​கட்​டத்​துக்கு எம்​எல்ஏ என்ற முறை​யில் பென்​ஷன் உள்​ளிட்ட சலுகைகளை கோர முடி​யாது.

தாமதம் கூடாது - நீதிபதி கருத்து

உச்ச நீதி​மன்​றத்​தின் தலை​யீடு காரண​மாகவே இந்த தேர்​தல் வழக்​கில் முடிவு எடுக்க 10 ஆண்​டு​கள்​ தாமத​மாகி விட்​டது. நீதி​மன்​றங்​கள் ஏற்​படுத்​தும் இது​போன்ற தேவையற்ற தாமதங்​கள் ஜனநாயகத்​தின் ஆன்​மாவை வேரோடு வீழ்த்தி விடும் என்​பதை நினை​வில் கொள்ள வேண்​டும்.

இதே ரீதி​யில் நீதித்​துறை​யின் வருங்​கால பயணம் அமைந்​தால் பல நாடு​களில் நில​வும் சூழல் இந்​தி​யா​விலும் அரங்​கேறி​விடும்” இவ்​வாறு நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் தனது தீர்ப்பில் தெரி​வித்தார்.

நீதி வென்றது - அப்பாவு மகிழ்ச்சி

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அப்​பாவு ‘‘10 ஆண்​டு​கள் தாமத​மாக இந்த தீர்ப்பு கிடைத்​தா​லும் எனது 10 ஆண்​டு​கால மன உளைச்​சலுக்கு வலி நிவாரணி​யாக நீதி கிடைத்​திருப்​பது மகிழ்ச்​சி​தான்’’ என்​றார்.

===================